உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலையின்மை, பணவீக்க உயர்வுதான் முக்கிய பிரச்னை: பிரியங்கா

வேலையின்மை, பணவீக்க உயர்வுதான் முக்கிய பிரச்னை: பிரியங்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வேலையின்மையும், பணவீக்க உயர்வும்தான் முக்கியமான பிரச்னைகள். அவற்றுக்கு பா.ஜ., அரசிடம் எந்த தீர்வும் இல்லை' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், இஸ்ரேலில் வேலை செய்ய ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனத்தில் இந்திய வாலிபர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது: உலகில் எங்காவது போர் நடந்தால், அங்குள்ள நமது குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதுதான் முதல் வேலையாக இருக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலையில், இளைஞர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போர் நடக்கும் இஸ்ரேலுக்கு செல்கின்றனர். அவர்களை செல்லவிடாமல் மத்திய அரசால் தடுக்க முடியவில்லை.அந்த இளைஞர்களுக்கு இந்தியாவில் ஏன் வேலை கிடைக்கவில்லை? 2 நாட்களாக வரிசையில் நிற்கும் அவர்கள், நம் நாட்டின் பிள்ளைகள் இல்லையா? இந்திய இளைஞர்களின் உயிரை தியாகம் செய்வதற்கு இஸ்ரேலுக்கு என்ன அடிப்படையில் இந்திய அரசு அனுமதி அளித்தது? அதை இளைஞர்களின் தனிப்பட்ட பிரச்னையாக மத்திய அரசு சித்தரிக்கிறது. உண்மையில், 'மோடி உத்தரவாதம்', 'ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை', '5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்' என்று சொல்வதெல்லாம் வெற்று கோஷங்கள். வேலையின்மையும், பணவீக்க உயர்வும்தான் முக்கியமான பிரச்னைகள். அவற்றுக்கு பா.ஜ., அரசிடம் எந்த தீர்வும் இல்லை. அதை இளைஞர்களும் உணர்ந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

g.s,rajan
ஜன 31, 2024 21:22

இதுதான் வளர்ச்சி அடைந்த பாரதம் .....


g.s,rajan
ஜன 31, 2024 21:13

நமது நாட்டில் உண்மையைச் சொன்னால் புத்தி பேதலித்துவிட்டது என்று பைத்தியக்காரப் பட்டம் கூட கட்டி விட்டு விடுவார்கள்.....


g.s,rajan
ஜன 31, 2024 21:08

ஆமாம் அதைத் தான் கூலா திசை திருப்பறாங்களே ....


g.s,rajan
ஜன 31, 2024 20:58

இந்தப் பத்து வருஷம் இது பத்திக் கொஞ்சம் கூட அவங்க கண்டுக்கவே இல்லை .....


g.s,rajan
ஜன 31, 2024 20:54

நம்ம நாட்டுல டாஸ்மாக்கே கதின்னு ஒரு சில பேர் இருக்காங்க ,எதுக்கு எடுத்தாலும் டாஸ்மாக்கை இழுப்பதைத் தவிர வேறு எந்தக் கருத்தையும் உருப்படியாக சொல்லத் தெரியாத பாடாவதி ஜென்மங்கள்....


J.V. Iyer
ஜன 31, 2024 19:17

பொருளாதாரத்தில் புலி இவர் என்றால் இவர் சொல்வதைக் கேட்கலாம். பாப்பு போன்றுதான் இவருக்கும் மூளை என்றால்....


jayvee
ஜன 31, 2024 18:24

அவர் சொல்லுவது காங்கிரஸில் வேலை இல்லாமல் இருக்கும் தொண்டர்களை பற்றி.. பணவீக்கம் ..காங்கிரஸிடம் செலவுக்கு கட்சி நிதி (கட்சி நிதி மட்டும்தான்) இல்லை .. அது பணவீக்கம் அல்ல மணவீக்கம் ..


Amjath
ஜன 31, 2024 17:59

ஏம்மா... நீ வேற... சின்னப்புள்ள அப்படி ஓரமாக போய் உன் ஆளோடு விளையாடு...


Anand
ஜன 31, 2024 17:50

உன்னோட சொந்த பிரச்னையை பேசக்கூடாது.....


g.s,rajan
ஜன 31, 2024 16:30

இந்தியாவில் வேலைகள் கொட்டிக் கிடக்கு ,ஆனால் சம்பளம்தான்


Tamilselvan,kangeyam638701
ஜன 31, 2024 16:45

வாங்குற சம்பளத்தை பூரா டாஸ்மாக்குல கொடுத்துட்டு வந்தா உருப்பட்ட மாதிரிதான்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ