உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்: உதவி செய்ய கட்சியினருக்கு பிரியங்கா வலியுறுத்தல்

வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்: உதவி செய்ய கட்சியினருக்கு பிரியங்கா வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'அசாமில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால், ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும்' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், சுமார் 24 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பாய்ந்து வருகிறது. மேலும் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அசாமில் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. தொடர்ந்து மோசமான சூழல் நிலவி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான விலங்குகள் இறந்துள்ளன. பலர் காயமடைந்து உள்ளனர். அசாமில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால், ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

rau
ஜூலை 08, 2024 11:04

If she is so worried about people struggling in rain related problems,she should have herself stepped into and taken action in helping people rather than giving directions to partymen.


Rajasekar Jayaraman
ஜூலை 08, 2024 08:26

இவங்க ac ரூமிளே இருந்து கொண்டு தொண்டனுக்கு உத்தரவு போடுவாங்கலாம் அங்கேயே இருந்து கொண்டு வழி நடத்துங்க


sankaranarayanan
ஜூலை 07, 2024 20:36

இந்திரா இந்திராதான் பிரியங்காவதேரா பிரியங்காவதேராதான் பியூனை சூடிபோட்டுக்கொண்டதால் அது புலி ஆகிவிடமுடியுமா


Barakat Ali
ஜூலை 07, 2024 14:34

மணிப்பூரில் அரசியலைத் தவிர என்ன செய்தீர்கள் ????


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை