உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உச்சநீதிமன்ற விசாரணையை படம்பிடிக்க செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கு முதன்முறையாக அனுமதி

உச்சநீதிமன்ற விசாரணையை படம்பிடிக்க செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கு முதன்முறையாக அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உச்சநீதிமன்றத்தின் 7 அமர்வுகள் கொண்ட சிறப்பு லோக் அதாலத் வரலாற்றில் முதல்முறையாக, நீதிமன்ற அறைகளில் வழக்கு நடைமுறைகளை படம்பிடிக்க செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.முன்பெல்லாம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எப்படி நடக்கிறது என்பது பொதுமக்களுக்கு தெரியாது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் வெளிப்படைத்தன்மைக்காக இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை பலரும் வரவேற்றனர். இதன்மூலம் விசாரணையில் நீதிபதிகள், வழக்கறிஞர்களின் வாதங்களை அனைவரும் அறிய முடிந்தது.இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 7 அமர்வுகள் கொண்ட சிறப்பு லோக் அதாலத் வரலாற்றில் முதல்முறையாக, நீதிமன்ற அறைகளில் வழக்கு நடைமுறைகளை படம்பிடிக்க செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செய்தி சேனல்கள் வாயிலாகவும் விசாரணை நடவடிக்கைகளை நேரலையில் காண முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 29, 2024 18:36

நீதி மன்றத்தின் தின நிகழ்வுகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்


GMM
ஜூலை 29, 2024 18:27

சரியோ, தவறோ இந்த படப்பிடிப்பு முறை வேண்டாம். நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்ற படப்பிடிப்பு மேற்கொள்ள முடியும். அரசு அலுவலக விசாரணை, மருத்துவ பரிசோதனை என்று நீடிக்க முடியும். மக்களுக்கு உடனுக்குடன் தகவல் தேவையில்லை. உழைத்து பிழைக்க வேண்டும். ஒரு வரி நீதிமன்ற செய்தி போதும். தீர்ப்பின் சமநிலையை முடிவு செய்ய முடியும்.


தஞ்சை மன்னர்
ஜூலை 29, 2024 16:47

இவர்கள் வழக்கு வரும் நீதிபதிகளை விலைக்கு வாங்கி யூ டியூப்புக்கு விற்காமல் இருந்தால் சரி


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ