உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் நிறுத்தம் குறித்து பார்லிமென்ட் குழுவிடம் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளிக்க உள்ளார்.இந்தியா - பாக்., இடையே கடந்த மே 10ல் திடீரென போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது. போர் நிறுத்தம் தொடர்பாக பார்லி சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும்; விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. எந்த சூழ்நிலையில் இந்தியா போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டது என்பது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து பார்லிமென்ட் குழுவிடம் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளிக்க உள்ளார். அவர் இந்தியா - பாக்., இடையே போர் நிறுத்தம் எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து முழு விளக்கத்தை அளிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பார்லி குழு உடன் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு நடக்க இருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Naga Subramanian
மே 19, 2025 13:12

காரணம் டிரம்ப் இல்லை என்பதை அந்த ஆளே சொல்லிவிட்டார். நிச்சயம் இந்திய இராணுவம் பயப்படவில்லை. பாகிஸ்தான்தான் இதற்கு காரணம் என்பது அனைவரும் அறிந்ததுதான்.


Nada Rajan
மே 19, 2025 12:43

போர் நிறுத்தம் எப்படி உருவாகினது என்பதை விளக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை