உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி காலமானார்

பீஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி காலமானார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் முன்னாள் துணை முதல்வரும் பா.ஜ.வைச் சேர்ந்தவருமான சுஷில்குமார் மோடி ,72 இன்று காலமானார்.இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இதற்கான சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலமானார். பா.ஜ.வைச் சேர்ந்த இவர், கடந்த 2005 முதல் 2013வரையும்,பின்னர் 2017 - 2020ம் ஆண்டுகளில் நிதீஷ்குமார் முதல்வராக இருந்த போது துணை முதல்வராக பதவி வகித்தார்.தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து டில்லியில் புறு்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று இரவு சுசில் மோடி காலமானார். நாளை(மே-14) அவரது சொந்த ஊரான பீஹார் மாநிலம் பாட்னா நகரில் உள்ள ராஜேந்திரா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டவரப்பட உள்ளது. மறைந்த அவருக்கு பா.ஜ., தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sivakumar Narayanan
மே 14, 2024 16:53

May his Soul Rest in Peace ரொம்ப அலட்டிக்கொள்ளாத லீடர்


மணியன்
மே 14, 2024 08:40

ohm Shanti. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.


Subramanian
மே 14, 2024 07:04

ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


தத்வமசி
மே 14, 2024 06:39

சிறந்த தலைவர் பிகாரில் பிஜேபியின் முன்னேற்றத்துக்கும் பிகார் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் அடிகோலியவர் பிகாரில் பல வளர்ச்சிப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் லாலு பிரசாத் யாதவின் காட்டாட்சியை முடிவுக்கு கொண்டு வந்து பொறுமையான அரசியலை செய்தவர் நிதிஷ் குமாரை வழிக்கு கொண்டு வந்தவர் தலைக்கனம் இல்லாத தலைவர்


Kannan Sethu
மே 13, 2024 23:41

இவருடைய பங்களிப்பு ஜிஎஸ்டி உருவானதிலும் சீர்திருத்த கவுன்சிலின் தலைவர் என்ற வகையிலும் மகத்தானது


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ