உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த அழுத்தத்திற்கும் இந்தியா அடிபணியாது: வௌியுறவு முன்னாள் செயலர் உறுதி

எந்த அழுத்தத்திற்கும் இந்தியா அடிபணியாது: வௌியுறவு முன்னாள் செயலர் உறுதி

புதுடில்லி: “இந்தியாவுக்கு, அனைத்து வழியிலும் அழுத்தங்களை கொடுக்க அமெரிக்க அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். ஆனால், இந்தியா எந்தவொரு நாட்டின் அழுத்தத்திற்கும் அடிபணியாது,” என்று நம் வெளியுறவு முன்னாள் செயலர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். நம் வெளியுறவு முன்னாள் செயலரான விகாஸ் ஸ்வரூப் இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ள தாவது: அமெரிக்கா - இந்தியா இடையேயான தற் போதைய உறவு நல்ல நிலையில் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான நல்ல நட்பு காரணமாக, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் சுமுகமாக கையெழுத்தாகும் என்று நினைத்திருந்தோம். ஆனால், அது நடக்கவில்லை. அமெரிக்க அதிகாரிகள், இந்தியா மீது அனைத்து வழியிலும் அழுத்தங்களை கொடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால், இந்தியா மிகவும் பெருமைமிக்க நாடு. எப்போதும், தன் சுயாட்சி கொள்கைக்கான உத்தியை பின்பற்றி வருவதால், எந்தவொரு நாட்டின் அழுத்தத்திற்கும் அடிபணியாது. இரு நாடுகளுக்கு இடையே தற்போதுள்ள நிலை தற்காலிகமானதே. இருதரப்பும் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை காண இன்னமும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், டிரம்ப் நிர்வாகத்தில் நிலவும் தற்போதைய கருத்துகள், இதற்கு நேர்மாறாக உள்ளன. இந்தியா தன் தேசிய நலன்களின் அடிப்படையிலேயே எந்தவொரு முடிவையும் எடுக்கிறது. இதை, இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து அதன் சர்வதேச உறவுகளில் ஒரு நீண்டகால கொள்கையாக கொண்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி