உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோகன் பகவத்தை கைது செய்ய சொன்னார்கள்; முன்னாள் விசாரணை அதிகாரி வெளிப்படை

மோகன் பகவத்தை கைது செய்ய சொன்னார்கள்; முன்னாள் விசாரணை அதிகாரி வெளிப்படை

மும்பை: “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை கைது செய்யும்படி சொன்னார்கள்,” என, விசாரணை பிரிவில் இருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரி மெஹ்பூப் முஜாவார் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவின் மாலேகானில், 2008 செப்., 29ல் மசூதி அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. இதில், ஆறு பேர் பலியாகினர்; 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விசாரணை ஆரம்பத்தில் ஏ.டி.எஸ்., எனப்படும் மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். 2011ல், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு வழக்கு மாற்றப்பட்டது. குண்டுவெடிப்பு தொடர்பாக, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், 17 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையில், நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தவறியதை அடுத்து, ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, ஹிந்து அமைப்புகளை வேண்டுமென்றே இவ்வழக்கில் சிக்க வைத்ததாக பா.ஜ., குற்றஞ்சாட்டியது. 'காவி பயங்கரவாதம் என்று ஒன்று கிடையாது; அதை உருவாக்கியதற்காக காங்., மன்னிப்பு கேட்க வேண்டும்' என, அக்கட்சி வலியுறுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை கைது செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதாக, வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவில் இருந்து ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் மெஹ்பூப் முஜாவார் சோலாப்பூரில் நேற்று கூறியதாவது: காவி பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை கைது செய்யும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டது. தவறான அபிப்பிராயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருப்பதன் வாயிலாக, பயங்கரவாத தடுப்பு படையின் போலி விசாரணை அம்பலமாகி உள்ளது. ராம் கல்சங்ரா, சந்தீப் டாங்கே, திலீப் படிதார் மற்றும் பகவத் உட்பட பல முக்கிய பிரமுகர்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தப்பட்டேன். மோகன் பகவத்தை கைது செய்ய செல்லும்படி என்னிடம் கேட்டுக்கொண்டனர். அந்த உத்தரவை நான் பின்பற்றவில்லை.

போலி வழக்கு

எனவே, என் மீது போலி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் என் போலீஸ் வாழ்க்கை சீரழிந்தது. என், 40 ஆண்டுகால வாழ்க்கை தொலைந்தது. நான் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. பயங்கரவாத தடுப்பு பிரிவு, எதைப்பற்றி எதற்காக அப்போது விசாரணை செய்தது என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால், அவர்களின் உத்தரவு அமல்படுத்தும் வகையில் இல்லை. காவி பயங்கரவாதம் என்ற ஒன்று இல்லை; அது போலியானது. இவ்வாறு அவர் கூறினார்.

சதி முறியடிக்கப்பட்டது!

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு வாயிலாக ஹிந்து பயங்கரவாத கதையை காங்கிரஸ் தலைமையிலான அரசு உருவாக்கியது. காவி பயங்கரவாதம், ஹிந்து பயங்கரவாதம் போன்ற சொற்கள் ஓட்டு வங்கிக்காக, 2008ல் பயன்படுத்தப்பட்டன. ஹிந்து மத முக்கிய தலைவர்கள், ஹிந்து அமைப்புகளை குறிவைத்து மாலேகான் வழக்கு விசாரணை இருந்தது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் வாயிலாக, ஹிந்து சமூகத்துக்கு எதிரான சதி முறியடிக்கப்பட்டது. -தேவேந்திர பட்னவிஸ் மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,

நான் முன்பே கூறினேன்...

மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை மற்றும் தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யுமான மகேஷ் ஜெத்மலானி நேற்று கூறியதாவது: பிரக்யா சிங் தாக்கூர் ஜாமின் தொடர்பாக, இந்த வழக்கு குறித்த விபரங்களை அறிந்தேன். அப்போதே எனக்கு தெரியும். இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட ஒரு கதை. இந்த வழக்கில், ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஏழு பேரும் விடுவிக்கப்படுவர் என அப்போதே நான் கூறியிருந்தேன். காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் துாண்டுதலாலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. நம் நாட்டில், பயங்கரவாதம் கூட அரசியலாக்கப்பட்டது மிகவும் கொடுமையான விஷயம். 'ஹிந்து பயங்கரவாதம்' என்ற விஷயத்தை தோற்றுவிக்க மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன் படுத்தப்பட்டன. இதனால், கொடூர குற்றங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

JaiRam
ஆக 02, 2025 16:11

நன்றி உணர்வு யென்ற துளியும் இல்லாத மூர்க்கர்கள் இவனுங்களுக்கு மாவீரன் நெதன்யாகுதான் சரியான நபர் மாவீரன் நெதன்யாகு வாழ்க


venugopal s
ஆக 02, 2025 12:22

மத்திய அரசும் அவர்களே,மாநில அரசும் அவர்களே, குற்றவாளிகளும் அவர்களே, காவல்துறையும் அவர்களே, அப்புறம் எப்படி குற்றத்தை நிரூபித்து தண்டிக்கப்படுவார்கள்!


ஆரூர் ரங்
ஆக 02, 2025 14:44

தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட பொன்முடி ஊழல் வழக்கில் பிராசிகியூசன் தரப்பான தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யாமல் காப்பாற்றுவது ஏன்?.ஆனால் மாலேகான் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது காங்கிரஸ் அரசு. வழக்கை பிஜெபி அரசு வாபஸ் பெறாமல் தொடர்ந்து நடத்தியது.


Santhakumar Srinivasalu
ஆக 02, 2025 11:53

காங்கிரஸ் இப்படி மிகவும் கேவலமான அரசியல் செய்யவேண்டுமா?


Bhakt
ஆக 02, 2025 11:42

பசியை திகார் உள்ளே அனுப்புங்க. கடைசி நாட்களை அங்கே கழிக்கட்டும்.


Suppan
ஆக 02, 2025 09:41

. இதுவரை நடந்த பயங்கர வாதங்கள் எந்த கும்பல்கள் நடத்தியது என்று எல்லோருக்கும் தெரியும். இஸ்லாமிய ஓட்டுக்களை குறிவைத்து பசி தான் இந்த காவி பயங்கரவாதம் என்று ஆரம்பித்தார். இன்றுவரை இந்த கேவலமான சிந்தனையை அவர் விடவில்லை. பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தான்தான் நடத்தியது என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்க ஆரம்பித்தார். இப்படி அப்பட்டமாக பாகிஸ்தான் ஆதரவு நிலையை அவர் மட்டுமல்ல காங்கிரசும் எடுத்துள்ளது. இந்த தேச விரோத சிந்தனையையும் தேச விரோதப்போக்கையும் என்றுதான் கைவிடுவார்களோ


hasan kuthoos
ஆக 02, 2025 09:31

அஸிமானந்தாவை யாருக்காவது நினைவில் இருக்கிறதா , அவர் கொடுத்த வாக்குமூலம் தான் மோகன் பாகவத இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது , குண்டு வைத்து விட்டு அதை மற்றவர் மீது பழிபோட்டு தப்புவது சங் கி களுக்கு கைவந்த கலை, காந்திஜி யை சுட்டுக்கொன்ற கோட்சே என்ற மாபாதகன் கையில் இஸ்மாயில் என்று பசசை குத்திக்கொண்டு இஸ்லாமியர்கள் meethu பழிபோட்டு இந்தியா முழுவதும் கலவரம் ஏற்படுத்த முயன்று அப்போதிருந்த arasiyal தலைவர்கள் அதை லாவகமாக கையாண்டு நிலைமையை சமாளித்தார்கள்


தியாகு
ஆக 02, 2025 09:47

அதெல்லாம் இருக்கட்டும் உலகில் மூர்க்கர்கள் நிறைந்திருக்கும் ஒரு நாடு கூட அமைதியாக இல்லையே, அதுக்கு பதில் சொல்லு.


Raman
ஆக 02, 2025 10:37

Anti-national spotted.


Bhakt
ஆக 02, 2025 11:43

NIA விசாரணையா


Bhakt
ஆக 02, 2025 11:44

தனிநாடு ரெண்டு வாங்கினீங்களே. அங்கே போய் தொலையுங்க டா


ஆரூர் ரங்
ஆக 02, 2025 11:45

கோட்சே முஸ்லிம் பெயரை பச்சை குத்திக் கொண்டதாகக் கூறுவது பொய். நீதிமன்ற வாக்குமூலத்தில் தான்தான் காந்தியை சுட்டேன் என்றுதானே ஒப்புக்கொண்டார். ஒருமுறை அந்த வாக்குமூலத்தை படித்துப் பார்த்தால் காந்தி பற்றிய மூட நம்பிக்கைகள் நீங்கும். பாகிஸ்தானின் உண்மையான தேசத்தந்தை யார் என்பதும் விளங்கும்.


Santhakumar Srinivasalu
ஆக 02, 2025 11:54

புது அறிவியல் கண்டுபிடிப்பு!


Mecca Shivan
ஆக 02, 2025 12:02

இந்த உண்மையை சொன்னது ஒரு இந்திய இஸ்லாமியர் ..நீ ?


Mecca Shivan
ஆக 02, 2025 12:02

இந்த உண்மையை சொன்னது ஒரு இந்திய இஸ்லாமியர் ..நீ ?


panneer selvam
ஆக 03, 2025 00:31

Do not spread false information . You are the real culprit to generate hatred among the people . Godse , never had any tattoo as Ismail . In fact , till the moment he went to gallows , he was smiling and accepted the verdict without murmur . Do not be a dangerous fanatic


Murugesan
ஆக 02, 2025 09:12

சிவ கங்கை எட்டப்பன் பாசி மாதிரியான கேவலமான அயோக்கியன் 2009 தேர்தல்ல தேற்றி போனான் அவனை முறைகேடு செய்து அமைச்சராக ஆக்கிய கேவலமான திருடன் கருணாநிதி ,அதற்காக 2கி வழக்கில் ஆதாரங்களை அழித்து காப்பாற்றிய நயவஞ்சக அயோக்கிய காங்கிரஸ்காரனுங்க, பாக்கிஸ்தானிய தீவிரவாதிகளை விட மிக கேவலமான கொடுரன்கள் திமுக காங்கிரஸ்காரனுங்க


தியாகு
ஆக 02, 2025 08:36

உலகின் கடைசி மூர்க்கன் இருக்கும்வரையில் உலகில் நிம்மதி இருக்காது. இதை படித்துவிட்டு உங்களுக்கு மூர்க்கத்தனமாக கோபம் வந்தால் நான் சொல்வது உண்மை என்றாகிவிடும். கோபம் வரவில்லை என்றால் நீயும் ஒரு இளிச்சவாய இந்துவே. ஹி...ஹி...ஹி...


GMM
ஆக 02, 2025 08:19

மோகன் பகவத் போன்ற தலைவர்கள் வன்முறை மூலம் தீர்வு காண மாட்டார்கள். கைது செய்ய கூறிய கயவர்களை சிறையில் ஜட்டியுடன் உட்கார வைக்க வேண்டும். இரு மதத்திலும் மக்கள் மாறி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மத மாற்றம் அங்கீகரிக்க கூடாது.


lana
ஆக 02, 2025 08:05

ஏண்டா பாவி 2008 இல் குண்டு வைத்தவன் இன்னும் இங்கு உக்காந்து இருப்பது ன்னு நீ நம்புற பாரு. இருக்கலாம் இந்த மண்ணின் உணவை தின்று விட்டு இந்த நாட்டை காட்டிக் கொடுக்கும் எட்டப்பன் ஏராளம். அதில் இந்த பாவி உம் ஒருவர்


முக்கிய வீடியோ