உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான்கு மாடி கட்டடம் இடிந்தது பால்கனி விழுந்து சிறுவன் பலி

நான்கு மாடி கட்டடம் இடிந்தது பால்கனி விழுந்து சிறுவன் பலி

புதுடில்லி:சப்ஜி மண்டியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. அதேபோல, நரேலாவில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்தான். வடக்கு டில்லி சப்ஜி மண்டி அருகே, பஞ்சாபி பஸ்தியில் இருந்த பழைமையான நான்கு மாடி கட்டடம் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு பலத்த சத்ததுடன் இடிந்து விழுந்தது. மீட்பு ஏற்கனவே, அந்தக் கட்டடம் பாதுகாப்பற்றது என மாநகராட்சி அறிவித்து, அங்கிருந்தவர்கள் காலி செய்திருந்தனர். எனவே, நேற்று நடந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்து, ஐந்து வண்டிகளில் தீயணைப்புப் படையினர் வந்தனர். இடிந்த கட்டடத்தில் அருகில் இருந்த கட்டடத்தில் சிக்கித் தவித்த, 14 பேரை மீட்டனர். வடக்கு டில்லி நரேலாவில் நேற்று முன் தினம் பெய்த மழை காரணமாக மாலை 4:00 மணிக்கு ஒரு வீட்டின் பால்கனி இடிந்து விழுந்தது. விசாரணை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த விவான்,4, மீது இடிபாடுகள் விழுந்து பலத்த காயம் அடைந்தான். ரத்த வெள்ளத்தில் கிடந்த விவான், சத்யவாடி ராஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டான். பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர். இரு விபத்துக்கள் குறித்தும் ,போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை