உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.70,000க்கு போலி மருத்துவ டிகிரி குஜராத்தில் சிக்கியது மோசடி கும்பல்

ரூ.70,000க்கு போலி மருத்துவ டிகிரி குஜராத்தில் சிக்கியது மோசடி கும்பல்

சூரத்,குஜராத்தில் 70,000 ரூபாய்க்கு போலி மருத்துவ டிகிரி விநியோகித்த கும்பல் மற்றும் அந்த டிகிரியை வைத்து கிளினிக் நடத்திய 14 போலி டாக்டர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.குஜராத்தின் சூரத் நகரில், போலி மருத்துவ டிகிரி வைத்து, மூன்று பேர் அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அவர்களின் கிளினிக்குகளில் சோதனை நடத்தினர். அவர்களிடம் மருத்துவ சான்றிதழை காட்டும்படி கேட்டதற்கு, 'எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவ வாரியம்' என்ற பெயரில் வழங்கப்பட்ட சான்றிதழைக் காட்டி உள்ளனர். ஆனால், அதுபோன்ற படிப்பே குஜராத்தில் இல்லை என்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், டாக்டர் ரமேஷ் என்பவர் 70,000 ரூபாய் பெற்றுக்கொண்டு, இந்த சான்றிதழ்களை வழங்கியதாகவும், இதை வைத்து ஹோமியோபதி, அலோபதி, ஆயுர்வேத மருத்துவம் பார்க்கலாம், எந்த பிரச்னையும் வராது என்று கூறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து போலி மருத்துவ படிப்பு சான்றிதழ் வினியோகித்த ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புக்கு என்று எந்த ஒரு ஒழுங்குமுறையும் இல்லாததை அறிந்த ரமேஷ், அந்த படிப்பின் பெயரில் ஒரு மருத்துவ வாரியத்தை அமைத்து, 15 நாட்களுக்குள் போலி மருத்துவ சான்றிதழ் வழங்கியுள்ளார். அவரிடம் சான்றிதழ் பெற்று கிளினிக் நடத்தி வந்த 14 போலி டாக்டர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ சான்றிதழ் பெற அவர் ஏற்படுத்திய மருத்துவ வாரியத்தில் 1,200 பேர் பதிவு செய்திருப்பது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Dharmavaan
டிச 07, 2024 17:13

ஏன் எல்லா டாக்டர்களும் தாங்கள் மறுத்து படிப்பு சான்றிதழை தாங்கள் க்ளினிக்குகளில் மாட்டி வைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும்


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 07, 2024 23:18

ஏற்கனவே பல ஆண்டுகளாக அப்படி ஒரு சட்டம் இருக்கத்தான் செய்கிறது அத்துடன் இந்திய மருத்துவக் கழகத்தின் பதிவுச் சான்றிதழையும் நோயாளிகளின் பார்வைக்கு வைக்க வேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 07, 2024 11:43

நம்முர்லேயும் போலி டாக்டருங்க இருக்காங்களே அவங்களும் குஜராத்துல இந்த மாதிரி படிச்சிருப்பாங்களோ? இருந்தாலும் இருக்கும். ஆமா, தெரியாமத்தான் கேக்குறேன், நம்மூர்ல மெய்யாலும் படிச்சாங்களோ இல்லே சர்டிபேட் மட்டும் வாங்குனாங்களோ , நம்ம சேறு மந்திரி புண்ணியத்துல நெறைய வாத்தியாருங்க நெறைய காலேஜ்ல வேலை பாத்து கல்லா கட்டுனாங்களே அது எத்தனை பேருக்கு இன்னமும் ஞாபகத்துல இருக்கு?


அப்பாவி
டிச 07, 2024 10:59

எனக்கு ஒரு போலி எம்.எல்.ஏ சர்டிபிகேட் வேணுமே. குஜராத்தி நல்லா பேசுவேன். குஜராத் சட்டசபைக்குள் நுழைஞ்சி பேச ஆசையா இருக்கு.


வாய்மையே வெல்லும்
டிச 07, 2024 17:50

வங்காளதேசத்தில் இருந்து கள்ளக்குடியேறிகள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டால் இருந்தது போச்சு நொள்ளக்கண்ணா கதையாகிவிடும் உங்களுக்கு எதற்கு இந்த வீண் விதண்டாவாதம் .


பாமரன்
டிச 07, 2024 09:29

ஆக்சுவலா நான் ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருப்பது போலி போர்ட் மற்றும் கஸ்டம்ஸ் க்ளியரன்ஸை... சீக்கிரம் அந்த சாதனையையும் பூலோக சொர்க்கம் குசராத்துல இருந்து எதிர்பார்க்கிறோம்


பாமரன்
டிச 07, 2024 09:18

குசராத்து மாடல்..


VENKATASUBRAMANIAN
டிச 07, 2024 07:48

இதை ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் உடனே குஜராத்தை பார் என்று விவாதம் செய்வார்கள். அதற்கு இந்திரகுமார் ப்ரியன் ஆர்கே கம்யூனிஸ்டுகள் எல்லோரும் ஒத்து பாடுவார்கள். லாவனி கச்சேரி இன்று இரவு 7 மணி முதல்.இங்கே உள்ளவற்றை பேசமாட்டார்கள்.இதுதான் திராவிட மாடல்


பாமரன்
டிச 07, 2024 09:20

எல்லாத்துக்கும் அரசை எதிர்பார்க்குறது தப்புன்னு செஞ்ச இந்த மக்கள் சேவையை புரிஞ்சிக்காம பேசுறானுவ ஆண்டி இன்டியன்ஸ்...


ramesh
டிச 07, 2024 17:59

நீங்கள் ஆளும் மாநிலம் என்றால் எதுவுமே தப்பில்லை அப்படித்தானே


Senthoora
டிச 07, 2024 07:48

தமிழராய் இருந்துகொண்டு, குஜராத்திகளுக்கு வக்காலத்து வாங்குறீங்க, போலி டாக்டர்கள். உருவாவதை ஆதரிக்கிறீங்க. அதெப்படி தமிழராய் இருந்துகொண்டு வடநாடுகளில் நடக்கும் முறை கேடுகளை ஆதரிக்கிறீங்க, ஆனால் வடநாட்டில் உள்ளவர்கள் தென்னாட்டில் இருப்பவர்களை பற்றி கவலைப்படுவதே இல்லை.


sridhar
டிச 07, 2024 09:05

நீங்கள் எல்லா தமிழர்களையும் ஒரே பார்வையா தான் பார்க்கிறீர்களா ? , மைனாரிட்டி என்றால் பரிவு , ஹிந்து என்றால் வெறுப்பு . அதிலும் ஒரு சில ஜாதிகள் மேல் பரிவு , அந்தணர்கள் மேல் வெறுப்பு .


hariharan
டிச 07, 2024 07:24

ஓஹோ, இது தான் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன், அந்த நீட்டைஒழித்து விடுவோம் என்று சொன்னார்களே, ஆனால் அங்கே ஒழித்துவிட்டார்கள், இங்கு, அடுத்த தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும்போது பார்த்துக்கொள்ளலாம். தேர்தல் வாக்குறுதிகளில் தேதி எல்லாம் போடக்கூடாது தலைவா.


Kasimani Baskaran
டிச 07, 2024 06:08

நல்ல வேளையாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் கண்டுபிடிக்க வேண்டியவர்கள் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுத்து விடுவார்கள். இதற்கு கதறும் உடன்பிறப்புக்கள் ஏன் தமிழகத்தில் குற்றப்பின்னையுள்ளவர்கள் மந்திரி சபையில் இருப்பதைப்பற்றி கவலைப்படுவதே கிடையாது?


பாமரன்
டிச 07, 2024 09:23

கரெக்ட் காசி... கேத்தன் தேசாய் அப்பிடின்னு ஒருத்தருக்கு நீங்க சொன்ன மாதிரி தான் கடுமையான தண்டனை வாங்கி குடுத்தாங்க... டைம் ஆகுதுன்னு பெஷலா கவனிக்க நீதிமன்றம் நமக்கு நாமே உருவாக்கினாலும் திட்டறாய்ங்க... ஆக மொத்தத்தில் டீம்கா ஒயிக


RAMAKRISHNAN NATESAN
டிச 07, 2024 05:59

தவறு செய்பவர்கள் குஜராத்தில் எளிதில் பிடிபடுகிறார்கள் ..... தமிழகத்தில் ????


Senthoora
டிச 07, 2024 08:00

ஜெயிலுக்கு போவாங்க, பிறகு பாதிநாள் பிணையில் வெளிவருவங்க, பிறகு முதல்வர் தனது பவரில் வெளியில் விட, தாரா, தப்பட்டை அடித்து, லட்டு கொடுத்து வரவேட்ப்பாங்க.


Dharmavaan
டிச 07, 2024 17:17

அரசனே திருடனானால் யார் பிடிபடுவான்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை