உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் துவக்கம்

இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீகாகுளம்: ஆந்திராவில் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் 'தீபம் - 2' என்ற திட்டத்தை, மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று துவக்கி வைத்தார்.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது.சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இதன்படி, தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆண்டுக்கு மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அத்திட்டத்தை 'தீபம் - 2' என்ற பெயரில் ஆந்திர அரசு நேற்று அமல்படுத்தியது. இதை, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் ஏடுபுரம் கிராமத்தில் உள்ள பெண் பயனாளி ஒருவரின் வீட்டில், சமையல் அடுப்பை ஏற்றிவைத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு இத்திட்டத்தை துவக்கி வைத்து, தேநீர் தயாரித்து அனைவருக்கும் வழங்கினார்.இந்த திட்டத்திற்காக மாநில அரசுக்கு 2,684 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kanns
நவ 02, 2024 15:19

Other than Providing Jobs Only on Minm Wages, Recover All Freebies Cost from All Concerned Parties & Remit into Govt Treasury


Ramesh Sargam
நவ 02, 2024 13:05

இந்த திட்டத்திற்காக மாநில அரசுக்கு 2,684 கோடி ரூபாய் செலவாகும். அதை சரிக்கட்ட மற்ற வசதிபடைத்த மக்கள் மீது வேறுவிதமாக வரி போன்றவற்றை ஏற்றி சமாளிப்பார்கள். ஆனால் மாநில அரசுக்கு செலவு என்று கூறுவார்கள். மாநில அரசுக்கு எங்கிருந்து பணம், நிதி கிடைக்கும்? யோசியுங்கள் மக்களே...


Duruvesan
நவ 02, 2024 11:54

எவன் வீட்டு காசு? இதுவே இங்கன்னா நம்ம பிஜேபி துள்ளி குதிச்சி இருக்கும்


Iniyan
நவ 02, 2024 08:38

இந்த நாயுடு ஒரு ஏமாற்று பேர்வழி. இவரை நம்பக்கூடாது. நம்பிக்கை துரோகம் இவருக்கு கை வந்த கலை.


Kasimani Baskaran
நவ 02, 2024 05:52

நிதியாதாரம் வலுவாக இருந்தால் சாதிக்கலாம் - இல்லை என்றால் சிக்கல்தான்.


முக்கிய வீடியோ