ஆர்.கே., பவுண்டேஷன் சார்பில் இலவச பட்டாசு, இனிப்பு வழங்கல்
தங்கவயல்: தங்கவயலில் ஆர்.கே., பவுண்டேஷன் சார்பில், தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, இலவச பட்டாசு வழங்கப்பட்டது.ராபர்ட்சன்பேட்டை கிங் ஜார்ஜ் அரங்கில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், தலைவர் மோகன் கிருஷ்ணா பேசியதாவது:தங்கவயலில், தீபாவளியை அனைவருமே மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக ஏழு ஆண்டுகளாக, 35 வார்டுகளிலும் இலவசமாக இனிப்புடன் பட்டாசு பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன.தங்கவயல் நகராட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. பொதுமக்களை வஞ்சிக்கின்றனர். இதைத் தடுக்க வேண்டும். இ - பட்டா விஷயத்தில், 'தில்லுமுல்லு' நடக்கிறது என்றெல்லாம் மக்கள் குறை கூறுகின்றனர்.நகராட்சியில், மக்கள் சேவைக்கு நேர்மையான செயல்வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் நகரில் வளர்ச்சிப் பணிகள் நடக்கும். கால்வாய், மின்விளக்குகள் சீர் செய்யப்பட வேண்டும். சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.சினிமா நடிகர்களை மிஞ்சும் வகையில், மக்கள் பிரதிநிதிகள் அழுதால், வளர்ச்சிப் பணிகள் நிறைவேறிடுமா? மக்களின் அத்தியாவசிய தேவைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். இனிமேல் 1,000 ரூபாய், 2,000 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்றால் அது பகல் கனவாக தான் இருக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.கவுன்சிலர் சக்திவேல், முன்னாள் கவுன்சிலர்கள் ரவிகுமார், ரவி, ரமேஷ் மற்றும் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.