வாசகர்கள் கருத்துகள் ( 2 )
முதல் முறையல்ல. இரண்டாம் முறை.
வாழ்த்துக்கள்.
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை தோற்கடித்து கோகோ கப் சாம்பியன் பட்டத்தை வென்றார்.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்றது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவருமான அரினா சபலன்காவும், 2ம் நிலை வீராங்கனையும், அமெரிக்காவை சேர்ந்தவருமான கோகோ கப் பலப்பரீட்சை நடத்தினர். 2 மணிநேரம் 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-7(5), 6-2, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கோகோ கப் முதல்முறையாக கைப்பற்றினார். கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில், இதே சபலன்காவை தோற்கடித்து கோகோ கப் மகுடம் சூடியிருந்தார். இதன்மூலம், 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
முதல் முறையல்ல. இரண்டாம் முறை.
வாழ்த்துக்கள்.