உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் மீண்டும் வன்முறை! கிராமத்தில் குண்டுவீசிய போராட்டக்காரர்கள்!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை! கிராமத்தில் குண்டுவீசிய போராட்டக்காரர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ள சம்பவம், அங்கு பதற்றத்தை உருவாக்கி உள்ளது. மணிப்பூரில் 2023ம் ஆண்டு மே மாதம் குக்கி பழங்குடி மற்றும் மெய்தி சமூகங்கள் இடையே பெரும் கலவரம் மூண்டது. ஓராண்டை கடந்தும் இந்த வன்முறைகள் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில் இன்று மீண்டும் அங்கு வன்முறை அரங்கேறி இருக்கிறது. ஜிர்பும் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ரா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏராளமான ஆயுதங்களுடன் இன்று (அக்.19) காலை உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் தாக்குதலை தொடங்கினர்.தாக்குதலை அறிந்த பாதுகாப்பு படையினர் பதிலடி தர, அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். இருதரப்புக்கும் பலமணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. சண்டையில் எந்த தரப்புக்கும் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுவதால் பாதுகாப்பு படையினர் அதிக எண்ணிக்கையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வன்முறை நிகழ்ந்த பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
அக் 20, 2024 02:29

இது ஒரு சின்ன கலவரம் தான். முருகர் சொல்வாரு.


kulandai kannan
அக் 19, 2024 22:06

மிஷநரிகளின் கைங்கரியம். NGOக்களை ரவுண்டு கட்டி துரத்தவேண்டும்.


Sivagiri
அக் 19, 2024 19:09

சிரியா சூடான் போல ஆகி விடுமா ? , அல்லது பங்களாதேஷ் , காஷ்மீர் போல ஆகி விடுமா ? . , பெரிய அளவில் தேடுதல் , மற்றும் கணக்கெடுப்பு வேட்டை நடத்தி , மிக விரைவில் , வெளி நாட்டவர்களை வெளியேற்றினால்தான் தப்பிக்கும் , இல்லாவிட்டால் மேற்கே பாகிஸ்தான் , கிழக்கே பங்களாதேஷ் , போல மணிப்பூரும் , இந்தியாவின் பெரிய பிரச்சினை ஆகி விடும் , மேற்குவங்கம் கொஞ்சம் கிட்டத்தட்ட அந்த நிலை அடைந்து விட்டது , காஷ்மீரில் நடந்த கொடூரம் போல திடீரென்று ஒரு நாள் மேற்குவங்கத்தில் நடந்தாலும் நடக்கலாம் . . .


வைகுண்டேஸ்வரன்
அக் 19, 2024 17:23

உள்நாட்டு சதி உள்ளது. வெளிநாட்டு சதி உள்ளது. சரி... இதையெல்லாம் முறியடித்து மக்களைக் காப்பாற்றி, அமைதியை நிலை நாட்ட வேண்டிய அரசு எங்கு உள்ளது? NIA அதிகாரிகளுக்கும், உள்ளூர் போலீஸாருக்கும் அறிவு உள்ளதா ? மணிப்பூர் முதல்வர் எங்கே? சும்மா சும்மா சதி, விதி என்கிறீர்களே, அவற்றை ஏன் ஒன்றிய, மாநில அரசுகளால் முறியடிக்க முடியவில்லை??


விதுரன்
அக் 19, 2024 17:00

ரஷியாவுக்குப் போய் உக்ரைன் போரை நிறுத்தப் போறாரு. புட்டின் ஜெலன்ஸ்கி பாய் பாய். ரெண்டு பேரையும்.கை குலுக்கி இனிப்பு வழங்க செய்யப்போறாரு.


ganapathy
அக் 19, 2024 16:21

போராட்டகாரனா? தீவிரவாதியா? மக்கள் குண்டு எறிந்து எந்த உண்மையான போராளி போராடுவான்? ஏன் தேவையில்லாத முட்டு?


S.Martin Manoj
அக் 19, 2024 15:34

ஒழுங்கா ஆட்சி செய்ய வக்கில்லை இதுலே உள்நாட்டு சதி வெளிநாட்டு சதின்னு


Sathyanarayanan Sathyasekaren
அக் 19, 2024 21:22

அய்யா மார்ட்டின், கலவரத்தை தூண்டி விட்டு தொடர்ந்து நடக்க வைப்பதே மதம் மாறிய, மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கிருத்துவர்கள் தான். இந்த கலவரம் ஏன், யாரால் ஆரம்பித்தது என்று தெரிந்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள் . உங்கள் அறிவுரையை, உயர்நீதிமன்றம் கொடுத்த இடஒதுக்கீடு தீர்ப்பை மதிக்காமல் போராடும் கிருத்தவ மிஸ்சினரிகளுக்கு வன்முறையை கைவிட சொல்லுங்கள்.


Ramesh Sargam
அக் 19, 2024 11:56

மத்தியில் ஆட்சி புரியும் பாஜகாவை எப்படியாவது வீழ்த்த இந்த எதிர்க்கட்சிகள் கூட்டு சேர்ந்து நடத்தும் வன்முறைகள் இவைகள். எதிர்க்கட்சியினர், தேசதுரோகிகள் ஒட்டுமொத்தமாக நசுக்கப்படவேண்டும்.


mindum vasantham
அக் 19, 2024 11:40

இதற்க்கு பின்னால் வெளிநாட்டு சக்தி உள்ளது


Ramesh Sargam
அக் 19, 2024 12:50

உள் நாட்டில் உள்ள தேசதுரோகிகளின் சதியும் உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை