குட்கா பாக்கெட்டில் கிடந்த தவளை உடல்
யஷ்வந்த்பூர்: 'குட்கா உட்கொள்வது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்' என குட்கா பாக்கெட்டில் எச்சரிக்கை அறிவிப்பு குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனாலும் பலர் உட்கொள்கின்றனர்.இந்நிலையில், யஷ்வந்த்பூர் ஜெ.பி., பூங்கா அருகில் மஞ்சுநாதா கான்டிமென்ட்ஸ் கடையில், விமல் என்பவர் குட்கா வாங்கி உள்ளார். பாக்கெட்டை திறந்து விரலை உள்ளே விட்டபோது, தடினமாக எதோ இருப்பதை உணர்ந்தார்.பாக்கெட்டை கீழே கொட்டியபோது, இறந்த சிறிய தவளை இருந்தது. இதை பார்த்த விமல் அதிர்ச்சி அடைந்தார். இந்த படத்தை, தனது சமூக வலைளத்தில் பதிவேற்றி உள்ளார்.இதற்கு சிலர், 'குட்காவை விட, தவளை சிறந்தது. ஆடு, கோழி சாப்பிடுபவர்களுக்கு தவளை பெரிய விஷயமில்லை' என குறிப்பிட்டுள்ளனர்.குட்கா பாக்கெட்டில் இறந்து கிடந்த தவளை.