உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய வெளியுறவு செயலர் பதவி மேலும் நீட்டிப்பு

இந்திய வெளியுறவு செயலர் பதவி மேலும் நீட்டிப்பு

புதுடில்லி: இந்திய வெளியுறவுத்துறை செயலராக வினய் மோகன் கவத்ரா பதவி காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா பணிநிறைவு பெற்றதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரலில் புதிய வெளியுறவு செயலராக நேபாள் தூதராக பணியாற்றிய வினய் மோகன் கவத்ரா நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் அளித்தது.வினய் மோகன் கவாத்ரா, 1988 ஐ.எப்.எஸ். கேடர் ஆவார். பிரதமர் அலுவலக இணை செயலர், உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு உயர் பதவிகளில் 32 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.இவரது பதவி காலம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில் மேலும் 6 மாதம் நீட்டித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நியமன குழு ஒப்புதல் அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை