உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் விவகாரத்தில் மேல் விசாரணை!

கெஜ்ரிவால் விவகாரத்தில் மேல் விசாரணை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் அளித்தது. அதேநேரம், அமலாக்க துறையின் கைது அதிகாரம் குறித்து அதிகமான நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரைத்தது.மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பான கொள்கையில் நிறுவனங்களுக்கு சாதகமான திருத்தங்கள் செய்து, முதல்வர் கெஜ்ரிவால் 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அமலாக்க துறை குற்றம் சாட்டியது. ஒன்பது முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவாலை, மார்ச் 21ல் அமலாக்க துறை கைது செய்தது.

ஜாமினில் விடுவித்தது

லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக சுப்ரீம் கோர்ட் அவரை ஜாமினில் விடுவித்தது. தேர்தல் முடிந்ததும் மீண்டும் சிறை சென்றார். கீழ் கோர்ட் ஜூன் 20ல் ஜாமின் வழங்கியது. டில்லி ஐகோர்ட் அந்த ஜாமினை நிறுத்தி வைத்தது. இதனால், மூன்று மாதத்துக்கு மேல் சிறை வாசம் அனுபவித்து வருகிறார். அமலாக்க துறை என்னை கைது செய்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன் விபரம்:கெஜ்ரிவால் ஜாமினில் விடுவிக்கப்படுவதற்கும், அவரிடம் விசாரணை நடத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வெளியே விட்டால் அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்ற அமலாக்க துறை வாதத்தை ஏற்க முடியாது. வெறும் விசாரணைக்காக மட்டும் ஒருவரை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை. அவர் குற்றம் செய்திருக்கிறார் என விசாரணை அதிகாரிக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அந்த நம்பிக்கைக்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும். அந்த ஆதாரங்களையும், அதன்படி உருவான தன் அனுமானத்தையும் விசாரணை அதிகாரி எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும். கெஜ்ரிவால் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு மாநில முதல்வராக பணி செய்கிறார். அவருக்கென உரிமைகள் உள்ளன. 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.

விரிவான விசாரணை

பண பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 19ன் கீழ், ஒருவரை கைது செய்ய அமலாக்க துறைக்கு உள்ள அதிகாரம் பற்றி பல கேள்விகள் உள்ளன. அந்த அதிகாரத்தை அமலாக்க துறை அதிகாரி தன் இஷ்டப்படி பயன்படுத்த முடியாது.சட்டம் அளித்துள்ள கைது செய்யும் அதிகாரத்தை அமலாக்க துறை எவ்வாறு பயன்படுத்துகிறது; சட்டப்படி அதன் செயல்பாடு சரிதானா என்பது குறித்து கெஜ்ரிவால் தரப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவை குறித்து விரிவான விசாரணை தேவையாகிறது. இந்த கேள்விகளை, கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம். அந்த விசாரணை முடிவடையும் வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் அளிக்கிறோம். வெளியே போன பிறகும், அவர் முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது. கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது.

அதிகாரம்

கெஜ்ரிவால் முதல்வராக நீடிக்க தடை விதிக்க வேண்டும் என்ற வாதத்தை நிராகரிக்கிறோம். அவர் பதவியில் நீடிக்கக்கூடாது என்று கூற கோர்ட்டுக்கு அதிகாரம் இருக்கிறதா என தெரியவில்லை. அவரே தான் இதில் முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர். சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கினாலும், இன்னொரு வழக்கில் அவரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது; அதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, அவர் சிறையில் இருந்து இப்போது வெளியே வர இயலாது. சி.பி.ஐ., வழக்கில் அவரது காவல் 25 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

உண்மை வென்றது

இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் அளிக்கும் என்பது பா.ஜ.,வுக்கு தெரியும். அதனால் தான் அவரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. பா.ஜ.,வின் சதி இப்போது வெளிப்பட்டுவிட்டது.ஆதிஷி, டில்லி அமைச்சர், ஆம் ஆத்மி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

SRIRAMA ANU
ஜூலை 13, 2024 22:01

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தர பிரதேசத்தில் வட்டார அளவில் ஊழல் மலிந்து காணப்படுவதாக சொந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராஜ் பிரதாப் சிங்.


M Ramachandran
ஜூலை 13, 2024 19:32

ஜெகஜ்ஜால படித்த ரவுடி. நீதிமன்றம் கொடுக்கும் செல்லத்தால் இனி என்ன செய்தாலும் நீதிமன்றம் இருக்கு என்ற தைறியத்தால் அரசியல் வாதிகள் துணிவுடன் காரியமாற்றலாம். வாழ்க பணநாயகம். தேர்தல் நாற்றத்தில் சில ரொட்டி துண்டுக்களை பீய்த்து எரிறிந்தால் போதும் பதவி நம் கையில். தைரியமாகா வினையாற்றலாம்


Kanns
ஜூலை 13, 2024 18:48

This is a False Case for Misusing Powers against Rising Good Opposition Politician & Aam Aadmi Party


என்றும் இந்தியன்
ஜூலை 13, 2024 18:02

Power of Reasoning என்று ஒரு சாப்ட்வேர் எந்த இந்திய நீதிபதியின் மூளையிலும் இல்லை என்று மிக தெளிவாகத் தெரிகின்றது அரசியல் வியாதி பெட்டி கொடுப்பவர் என்றால் அது இவர்களுக்கு பணி செய்வதில்லை. 9 முறை அமலாக்கத்துறை விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பினாலும் வராதவன் பிறகு கைது???கேட்டால் நான் முதல்வன் எனக்கு எவ்வளவு வேலை இருக்கும் என்று டப்பா அடிப்பது. இப்படி இருப்பவன் எப்படி விசாரணைக்கு ஒத்துழைப்பான் இது கூடத்தெரியாது இந்த அநீதிபதிகளுக்கு ???


என்றும் இந்தியன்
ஜூலை 13, 2024 18:02

Power of Reasoning என்று ஒரு சாப்ட்வேர் எந்த இந்திய நீதிபதியின் மூளையிலும் இல்லை என்று மிக தெளிவாகத் தெரிகின்றது அரசியல் வியாதி பெட்டி கொடுப்பவன் என்றால் அது இவர்களுக்கு பணி செய்வதில்லை. 9 முறை அமலாக்கத்துறை விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பினாலும் வராதவன் பிறகு கைது???கேட்டால் நான் முதல்வன் எனக்கு எவ்வளவு வேலை இருக்கும் என்று டப்பா அடிப்பது. இப்படி இருப்பவன் எப்படி விசாரணைக்கு ஒத்துழைப்பான் இது கூடத்தெரியாது இந்த அநீதிபதிகளுக்கு ???


Iniyan
ஜூலை 13, 2024 16:26

அயோகியர்களின் கூடாரம் நீதி மன்றங்கள்.


rsudarsan lic
ஜூலை 13, 2024 14:05

அதாவது இன்னேரம் நூறு கோடி வந்த விவரமும் சென்ற விவரமும் தெரியவில்லை என்றால் நாட்டின் நிதி நீதி அனைத்து துறைகளும் திருத்தப்பட வேண்டியது தான்


rsudarsan lic
ஜூலை 13, 2024 14:00

This should have been done 2-3 years ago. Either ED has to complete the investigation or leave. Better late than never.


Swaminathan L
ஜூலை 13, 2024 11:54

அமலாக்கத் துறை அதிகாரம் குறித்த அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேல் விசாரணை போவது அவசியமாகி விட்டது. அமலாக்கத்துறை அதிகாரியின் விசேஷ அதிகாரங்கள் நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாகும். அடுத்த கட்டங்களுக்கு விசாரணை, வழக்கு நகராமல் மாதக்கணக்கில் ஒருவரை சிறை வைப்பது குறித்து உச்சநீதிமன்றக்கு ஒப்புதல் இல்லை. மற்றபடி, கெஜ்ரிவால் கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என்கிற உத்தரவு அவருக்கு உகந்ததாகவே இருக்கும்.


Dharmavaan
ஜூலை 13, 2024 10:28

9 murai samman anuppiyum varaathavan eppadi vichaaranaikku varuvan enbathu adippadai pothu arivu kelvi ithu eerkamudiyaathu enbathu neethigalin eemaatru vaatham


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை