உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடக்காத ஒன்றுக்காக நாடகம் ஆடுகிறது இண்டி கூட்டணி!

நடக்காத ஒன்றுக்காக நாடகம் ஆடுகிறது இண்டி கூட்டணி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

-நமது நிருபர்-https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=00qw90ea&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தங்களிடம் இருக்கும் எம்.பி.,க்களின் பலத்தை கொண்டு, உயர்நீதி மன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வாய்ப்பில்லை என்று நன்கு தெரிந்திருந்தும், திமுக எம்.பி.,க்கள், பார்லியில் இன்று அதற்கான மனு தயார் செய்து கொடுத்தனர்.மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதியாக இருப்பவர் ஜி.ஆர்.சுவாமிநாதன். பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியவர். அண்மையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். இவரது உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றாமல் மேல்முறையீடு செய்து இருக்கிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்ட நிலையிலும், தமிழக அரசு தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.அதற்கு மாறாக, தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிரான அவதுாறு பிரசாரத்தில், திமுகவும், அதன் கூட்டணி கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். லோக்சபாவில் இன்று, இண்டி கூட்டணியினர் சார்பில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்க கோரும் தீர்மான நோட்டீஸ் சபாநாயகரிடம் தரப்பட்டது. எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர், பாலு, பிரியங்கா, அகிலேஷ் யாதவ் ஆகியோர் இதை சபாநாயகரிடம் வழங்கினர்.இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் தங்கள் கையெழுத்தை பதிவிட்டு உள்ளனர். திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மற்ற மாநில கட்சிகளின் எம்பிக்களும் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றனர். விதிமுறை சொல்வது என்ன?உயர்நீதிமன்ற நீதிபதியின் பதவி நீக்கத்துக்கு ஆதரவாக லோக்சபா எம்.பி.,க்கள் 100 பேர், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 50 பேர் கையெழுத்திட்டு, முறையே சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவரிடம் மனு தர வேண்டும். இந்த மனுவை ஏற்பதா, இல்லையா என்பதை சபாநாயகர்/ராஜ்யசபா தலைவர் முடிவு செய்வார். ஏற்றுக்கொள்ளப்பட்டால், மூன்று உறுப்பினர் குழு அமைத்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைக்குழுவானது, தங்கள் அறிக்கையை, சபாநாயகர்/ ராஜ்யசபா தலைவரிடம் சமர்ப்பிக்கும். சம்பந்தப்பட்ட நீதிபதி குற்றவாளி என்று குழுவின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்தால், பார்லி அவைகளின் விவாதத்துக்கும், ஓட்டெடுப்புக்கும் விடப்படும்.ஓட்டெடுப்பு எப்படிஇரு அவைகளிலும், கலந்துகொண்டு ஓட்டளிக்கும் உறுப்பினர்களில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றி, அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் பிறகே, அவர் நீதிபதியை பதவி நீக்கும் செய்து உத்தரவிடுவார்.திமுக அங்கம் வகிக்கும் இண்டி கூட்டணி கட்சிகளுக்கு இத்தகைய பலம் லோக்சபாவிலும் இல்லை; ராஜ்யசபாவிலும் இல்லை. எனவே, அவர்களது மனு, ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யப்பட்டு விடுவதற்கான வாய்ப்பு தான் இருக்கிறது.அப்படியெனில், அவர்களது நோக்கம் என்ன? 'தாங்கள் இந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்காக இப்படியெல்லாம் செய்தோம்' என்று கூறி தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காகவே இத்தகைய மனுக்களை கொடுத்து நாடகம் ஆடுகின்றனர் என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

பேசும் தமிழன்
டிச 09, 2025 19:37

இண்டி கூட்டணிக்கு எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று நன்றாகவே தெரியும்.... இருந்தும் இந்த நடவடிக்கை.... தோல்வி அடையும் போது.... இருக்கவே இருக்கிறார்..... ராகுல்..... அவருக்கு தான் ஒன்றுமில்லையே ???


பேசும் தமிழன்
டிச 09, 2025 18:35

இது நீதித்துறை மீதான மறைமுக தாக்குதல்..... எங்களுக்கு எதிராக தீர்ப்பு சொன்னால்.....நாங்கள் உங்களை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்போம் எ‌ன்று‌ கூறுவது போல் இருக்கிறது இவர்களின் நடவடிக்கை.... உச்ச நீதிமன்றம் இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.


பேசும் தமிழன்
டிச 09, 2025 18:30

ஆனால் தோல்வி அடையும் போது இண்டி கூட்டணி மானம் போய் விடுமே..... அதெல்லாம் சகஜம் தானே அவர்களுக்கு !!!


V RAMASWAMY
டிச 09, 2025 18:24

அவர்கள் சுய லாபத்திற்காக எந்த ஒரு அடாவடியையும் செய்யத் தயங்காதவர்கள்.


Mohanakrishnan
டிச 09, 2025 17:49

விவஸ்தை இல்லாத கூத்தாடி கூட்டம்


Mohanakrishnan
டிச 09, 2025 17:46

தகிடு தத்தம் தெரிந்ததுதான்


srinivasan
டிச 09, 2025 17:35

திமுகவிற்கு தைரியம் கொடுத்தது யார்.? இன்னொரு சுதந்திரப் போர் உருவாகிறது


Modisha
டிச 09, 2025 17:27

செய்யட்டும், இப்படியே செய்ததால் தான் வடக்கே ஹிந்துக்கள் ஒன்று கூடி indi கூட்டணியை தூக்கி வீசினார்கள். பப்பு கூட்டாளிகளுக்கு அறிவிருந்தால் திமுகவை ஒதுக்குவார்கள் .


chinnamanibalan
டிச 09, 2025 17:18

சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, எந்த ஒரு எல்லைக்கும் இவர்கள் செல்வார்கள்!.


Madras Madra
டிச 09, 2025 17:16

கட்டு கட்டாக லஞ்ச பணம் கிடைத்த நீதிபதிக்கு எதிராக இண்டி கூட்டணி எடுத்த நடவடிக்கை என்ன ? திமுக என்ற கட்சி யின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச அபிமானமும் தரை மட்டம் ஆகி கொண்டு இருக்கிறது இந்த நான்கரை ஆண்டு ஆட்சியில் அதை தெரிந்து கொள்ளாமல் தொடர்ந்து நாடகம் நடத்தி கொண்டு தமிழகத்தின் மதிப்பை அதல பாதாளத்துக்கு கொண்டு சென்று விட்டது திராவிட மாதிரி ஆட்சி


சமீபத்திய செய்தி