உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி20 உச்சி மாநாடு: 3 நாடுகள் அரசு முறை பயணம் புறப்பட்டார் பிரதமர் மோடி

ஜி20 உச்சி மாநாடு: 3 நாடுகள் அரசு முறை பயணம் புறப்பட்டார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று புறப்பட்டார்.நைஜீரியாவில் இரண்டு நாள் தங்கவுள்ள பிரதமர் மோடி, 18, 19 தேதிகளில் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார்.பிறகு, 19 முதல் 21 தேதிகளில் கயானாவுக்கும் செல்கிறார். 1968க்கு பிறகு கயானாவிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைக்கிறது. அங்கு நடக்கும் CARICOM - INDIA உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.மூன்று நாடுகள் பயணம் செல்லும் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:பிரேசிலில் நடக்கும் 19வது ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வேன். கடந்த ஆண்டு, இந்திய மக்களால் வெற்றிகரமாக ஜி-20 உச்சி மாநாடு நடத்தப்பட்டது.இந்த ஆண்டு, பிரேசிலில் நடக்கும் மாநாட்டில் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நமது பார்வைக்கு ஏற்ப அர்த்தமுள்ள விவாதங்களை எதிர்பார்க்கிறேன்.பாரம்பரியம், கலாசார மதிப்புகள் அடிப்படையிலான நமது தனித்துவமான உறவை பலப்படுத்துவது குறித்து கருத்துகளை பரிமாறிக்கொள்வோம்.உச்சிமாநாடு, வரலாற்று உறவுகளை புதுப்பிக்கவும், புதிய களங்களுக்கு நமது ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் உதவும்.இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
நவ 17, 2024 08:57

இப்போ உலக அமைதிக்காக நைஜீரியா, கயானா, பிரேசில் போயே ஆகணும். இல்லேன்னா, போர் வந்துரும்.


Narayanan Muthu
நவ 16, 2024 21:25

அப்பாடா மூன்று நாள் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் உள்ள மக்களுக்கு நிம்மதி. பிரச்சாரம் என்ற பெயரில் பொய்யும் புரட்டும் வெறுப்பு பேச்சும் இல்லாமல் மக்கள் மனநிறைவோடு இருக்கலாம்


vadivelu
நவ 17, 2024 07:29

மன சாட்சியே இல்லாமல் இனி நீங்க பொய்யும் புரட்டும் உரூட்டலாம். இப்படியே காலம் கழிந்து விடும் பாவம் ஐயா


Duruvesan
நவ 16, 2024 19:37

எலெக்ஷன் tour முடிஞ்சது, இப்போ உலக tour ஸ்டார்ட்


sankaranarayanan
நவ 16, 2024 18:33

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற தலைப்பு இப்போது தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது இதுவே ஒரு பெரிய உதாரணம் இதை மோடி பயன்படுத்துவாரா


saiprakash
நவ 16, 2024 17:31

சின்ராசுவ கையிலேயே பிடிக்கமுடியாது


வைகுண்டேஸ்வரன்
நவ 16, 2024 17:31

விமானத்தை ஒழுங்கா செக் பண்ணுங்கப்பா. லாங் ட்ரிப் போகுது. ஜார்க்கண்ட் ல மாதிரி டெக்னிகல் பிரச்சனை இருக்கப் போவுது.


Sundar R
நவ 16, 2024 17:23

Bharat in this G20 summit, is a powerful troika member in Rio de Janeiro. ModiJi will therefore be an important member among the leaders of the 20 nations. Let us hope that the world gets something more than the theme of this summit.


முக்கிய வீடியோ