உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழங்குடியின நபரை காரில் இழுத்து சென்ற கும்பல்

பழங்குடியின நபரை காரில் இழுத்து சென்ற கும்பல்

வயநாடு : கேரளாவில் சுற்றுலா கும்பலுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற பழங்குடியின நபரை, ஒரு கும்பல் தங்கள் காரில் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவில் வயநாடு மாவட்டத்தின் கூடல்கடவு அருகே உள்ள தடுப்பணையை பார்வையிட வந்த இரு சுற்றுலா குழுக்கள் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. அப்போது, செம்மாடு பகுதி பழங்குடியினத்தைச் சேர்ந்த மாதன், 49, என்பவர், அவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.

இதையடுத்து, சுற்றுலாவுக்காக வந்திருந்த ஒரு தரப்பினர் மாதனை தாக்கியதுடன், அவரது கைகளை காரின் கதவில் சிக்க வைத்து, காரை வேகமாக இயக்கினர்.தன் கைவிரல் சிக்கியதால் அலறிய மாதன், உடனே காரை நிறுத்துமாறு கூச்சலிட்டார். அதை பொருட்படுத்தாமல், அந்த கும்பல் அரை கி.மீ., துாரம் வரை காரை இயக்கி, அவரை கீழே தள்ளிவிட்டு சென்றது.சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டதால் மாதனின் கை, கால்கள் மற்றும் முதுகு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட அந்த காரின் உரிமையாளர், மலப்புரம் மாவட்டம் குட்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
டிச 17, 2024 11:00

குற்றவாளி மார்க்க ஆள். அவங்க போட்ட பிச்சையில் அங்கு எம்பி ஆகியிருக்கும் அம்மா பாலஸ்தீன பிரச்சனையில் மூழ்கியிருக்கிறார். பழங்குடியினர் எக்கேடு கெட்டால் அவருக்கென்ன? பாதிக்கப்பட்ட நபர் இத்தாலியனல்லவே.


TRUE INDIAN
டிச 17, 2024 09:40

இந்த அப்பாவி போர்வையில் உள்ள மூர்க்கனுக்கு எதுக்கு கோவம் வருது,


அப்பாவி
டிச 17, 2024 08:36

தேடி கைது புண்ணாக்கெல்காம் பண்ணி டயத்த வேஸ்ட் பண்ணாதீங்க. கும்பலையே போட்டுத் தள்ளிட்டு வாங்க.


அம்பி ஐயர்
டிச 17, 2024 07:17

அதே போல அந்தக் கார் ஓட்டினவனையும் கூட வந்தவங்களையும் ஒவ்வொருத்தரா ஒரு கிமீட்டர் தூரம் கட்டி இழுத்துச் செல்ல வேண்டும்.. அதான் சரியான தண்டனை.... ஆனால் யாரு கொடுப்பாங்க....??


நிக்கோல்தாம்சன்
டிச 17, 2024 06:32

இந்த வீடியோவை நானும் பார்க்க நேர்தது , பன்றியை போன்ற அந்த கார் ஓட்டுநர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்படவேண்டியவர்


சம்ப
டிச 17, 2024 03:09

அதே போல அவனும் இழுக்க படனும். ஆனால் இந்த நாட்டில்


K V Ramadoss
டிச 17, 2024 02:17

வயநாடு M.P இதை கவனிப்பாங்களா?


அப்பாவி
டிச 17, 2024 08:38

ஏன்? பழங்குடியினரின் பாதுகாவலர் கவனிக்கக் கூடாதா? ஜனாதிபதி தலையிடக் கூடாதா?


முக்கிய வீடியோ