மேலும் செய்திகள்
ரூ.2 கோடி மோசடி மேலும் ஒருவர் கைது
30-Oct-2025
புதுடில்லி: சைபர் குற்றங்களுக்கு எதிரான கடந்த ஒரு வார கால நடவடிக்கையில் டிஜிட்டல் கைது மற்றும் வீட்டு வேலை மோசடி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் மோசடி வழக்குகளில் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். சைபர் கிரைம் மோசடி கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அப்பாவி மக்களை அதிநவீன டிஜிட்டல் பொறிகள் மூலம் வேட்டையாடும் சைபர் குற்ற நெட்வொர்க்குகளை அகற்றுவதற்கான முயற்சியை டில்லி போலீசார் மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக டில்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போலீசார் அதிரடி விசாரணை, சோதனைகளை மேற்கொண்டனர். இதில் டில்லியின் ரன்ஹோலா விரிவாக்கத்தை சேர்ந்த கல்ப் அன்சாரி, 25, என்பவரை போலீசார் கைது செய்தனர். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மிரட்டி 3 லட்ச ரூபாய் பணம் பறித்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அன்சாரியிடமிருந்து ஏழு மொபைல் போன்கள், மூன்று ஏ.டி.எம்., கார்டுகள், இரண்டு காசோலை புத்தகங்கள், ஒரு பாஸ்புக் மற்றும் இரண்டு சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்டதாக, பரிதாபாத்தின் பல்லப்கரில் இருந்து சிவா, 19, புனித் குமார் என்கிற சாஹில், 22, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். டிஜிட்டல் கைது என்ற பெயரில், ஒரு பெண்ணிடம் 11.75 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்ற சைபர் மோசடி வழக்குகளில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்த அங்கித் சோன்காரியா, உத்தரபிரதேசத்தின் அலிகாரைச் சேர்ந்த லாவ்லேஷ் குமார், 22, ஹர்பஜன், 24, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
30-Oct-2025