உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குப்பை தொட்டியான பெங்களூரு மழையால் தொழிலாளர்கள் அவதி

குப்பை தொட்டியான பெங்களூரு மழையால் தொழிலாளர்கள் அவதி

பெங்களூரு, : பெங்களூரில் மழை பிரச்னையுடன், குப்பை பிரச்னையும் அதிகரித்துள்ளது. தசராவுக்கு பின் அனைத்து இடங்களிலும், குப்பை குவிந்து கிடக்கிறது.பெங்களூரில் சமீப ஆண்டுகளாக உலர்ந்த மற்றும் ஈரக்குப்பை மிக அதிகமாக உருவாகிறது. இதை அப்புறப்படுத்தி, மறு சுழற்சி செய்வதற்குள் மாநகராட்சிக்கு போதும், போதும் என்றாகிறது. இதுவரையிலும் குப்பை பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் திணறுகிறது.குறிப்பாக பண்டிகை நாட்களில் சாலைகள், மார்க்கெட் என பல்வேறு இடங்கள் குப்பை தொட்டியாக மாறுகின்றன. தசரா முடிந்த பின், ஆயிரக்கணக்கான டன் குப்பை காணப்படுகிறது. பல இடங்களில் வாழை மரங்கள், பூசணிக்காய், பூக்கள் குவிந்து கிடக்கின்றன. மழையும் பெய்வதால், குப்பையை அகற்றும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.கே.ஆர்.மார்க்கெட், மல்லேஸ்வரம், கே.ஆர்.புரம், மடிவாளா, காந்தி பஜார், ரஸ்ஸல் மார்க்கெட், மாநகராட்சி பஜார் உட்பட 12 மார்க்கெட்டுகளில் குப்பை மையமாக காட்சி அளிக்கிறது. தசரா பண்டிகையால் உருவான குப்பையை, கடந்த 3 நாட்களாக துப்புரவு தொழிலாளர்கள் அகற்றி வருகின்றனர். நேற்றும் கூட மழைக்கு இடையிலும், குப்பையை அகற்றினர்.மாநகராட்சி திடக்கழிவு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:தசரா பண்டிகையால், மூன்று நாட்களில் 17,000 டன் குப்பை உருவாகியுள்ளது. மற்ற நாட்களில் தினமும் 4,900 டன் குப்பை உருவாகும். பண்டிகை நாட்களில் இந்த அளவு 6,306 டன்னாக அதிகரித்துள்ளது. இவற்றை துப்புரவு தொழிலாளர்கள் அள்ளி, அப்புறப்படுத்துகின்றனர். மழை பெய்வதால் குப்பையை அள்ளுவது கஷ்டமாக உள்ளது.அதிகமான குப்பையை அள்ள வசதியாக, கூடுதலாக ஆட்டோ டிப்பர்கள், காம்பக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. குப்பை தரம் பிரித்து, மறு சுழற்சி மையங்களுக்கு அனுப்பப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை