உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைத்து சூழ்நிலைகளிலும் வழிகாட்டும் கீதை: மோகன் பகவத்

அனைத்து சூழ்நிலைகளிலும் வழிகாட்டும் கீதை: மோகன் பகவத்

லக்னோ: '' அனைவரும் பகவத் கீதையை அதன் உண்மையான வடிவத்தில் படிக்க வேண்டும். அதனை ஆழமாக புரிந்து கொண்டால், அனைத்தும் தெளிவாகிவிடும்.'', என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:இந்தியாவின் சுதந்திரத்துக்காக அனைத்தையும் தியாகம் செய்த 1857 ம் ஆண்டின் நமது துணிச்சலான வீரர்கள், தங்கள் வாழ்நாளில் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்படுவதைக் காணவில்லை. இன்று எல்லாவற்றையும் லாப , நஷ்டத்தால் மக்கள் அளவிடுகிறார்கள். ஆனால், சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத் என்ன பெற்றார். அவர் ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து இறுதியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அது தான் நாம் விரும்பும் வாழ்க்கையா? ஆனாலும், அது தலைமுறை தலைமுறையாக நாம் நினைவில் வைத்திருக்கும் ஒரு வாழ்க்கை. தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும் ஒரு வாழ்க்கை.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த போர்களைப் போலவே இன்றும் போர்கள் நடக்கின்றன. அப்போது இருந்ததைப் போல இன்றும் குற்றங்கள், பேராசை மற்றும் அனைத்தும் இருக்கின்றன. நாம் அனைவரும், ஹிந்து சமூகம் மற்றும் ஹிந்து ராஷ்டிரத்தின் மக்கள். நாம் தர்மத்தை பின்பற்ற வேண்டும். நமது கடமைகளைச் செய்ய வேண்டும். உலகிற்கு சேவை மற்றும் தியாகத்தின் செய்திகளை அளிக்க வேண்டும். உலகெங்கிலும் உளள அனைத்து மரபுகள் மற்றும் அறிவு, கடந்த கால மற்றும் எதிர்காலம் ஆகியவை பகவத் கீதையின் 700 ஸ்லோகங்களில் வழங்கப்பட்டுள்ளது.அனைவரும் பகவத் கீதையை அதன் உண்மையான வடிவத்தில் படிக்க வேண்டும். அதனை ஆழமாக புரிந்து கொண்டால், அனைத்தும் தெளிவாகிவிடும். கீதையின் ஒரு சிறப்புத் தன்மை என்னவென்றால், நீங்கள் அதைப்பற்றி சிந்திக்கும் ஒவ்வொரு முறையும், உங்கள் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமான ஒன்றை, புதிதாக கண்டுபிடிப்பீர்கள். அது எல்லாவற்றையும் கொண்டுள்ளது. எல்லா நேரங்களிலும் எல்லா சூழ்நிலைகளுக்கும் வழிகாட்டுதலை வழங்குகிறது.செல்வமும், செழிப்பும் பெருமளவில் பெருகியுள்ளன. ஆனால், வாழ்க்கையில் ஒழுக்கம், அமைதி மற்றும் மனநிறைவு இல்லை. உண்மையான ஓய்வு இல்லை. மக்கள் தங்கள் பாதையில் வெகுதூரம் முன்னேறிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் அது இன்னும் தவறான பாதை என்று உணர்கிறார்கள். சரியான பாதையை இந்தியாவில் மட்டுமே காண முடியும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை