உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு தியாகி அந்தஸ்து: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்

பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு தியாகி அந்தஸ்து: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கோரிக்கை விடுத்து உள்ளார்.காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆறுதல் தெரிவித்தார். பாகிஸ்தான் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.இந்நிலையில் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பஹல்காமில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரின் துயரத்திலும், தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் என கோருவதற்கும் நான் ஆதரவாக உள்ளேன்.இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

K V Ramadoss
மே 02, 2025 21:45

என்ன பிதற்றுகிறார்


தமிழ்வேள்
மே 01, 2025 22:05

உன்னுடைய கபில் சிபல், உலக கோர்ட்டில் சிந்து நதி நீர் தாவா தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் சார்பில் பாரதத்துக்கு எதிராக ஆஜராகி வாதாட போவதாக செய்திகள் வருகின்றன..நீயும் உனது கட்சியும் உண்மையான இந்தியர்கள் ஆக இருந்தால், கபில் சிபல் ஐ உன் கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய் பாரதத்துக்கு சார்பாக தேச பக்தியோடு நடந்துகொள்... பாகிஸ்தான் அடிமை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்காதே.


rama adhavan
மே 02, 2025 10:11

கபில் சிபல் சமாஜ்வாதி கட்சி. அக்கட்சியின் ராஜ்யசபை எம்பி. முன்பு காங்கிரஸ்ஸில் இருந்தார். பின்பு இராஜினாமா செய்து விட்டார்.


Vijay D Ratnam
மே 01, 2025 21:55

ஆண்டு முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் சேமித்து குடும்பத்தோடு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற நடுத்தர வர்க்க மக்களை, இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒவ்வொருவரையும் ஹிந்துவா என்று கேட்டு உறுதி செய்யப்பட்டு சுட்டுக்கொன்று இருக்கிறார்கள். அவர்களுக்கு தியாகி அந்தஸ்து கொடுக்கணுமாம். அத்த வச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும். காஷ்மீரில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள் 26 பேரின் குடும்பத்திற்கும் தலா பத்து கோடி ரூபாய் வழங்கவேண்டும். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கவேண்டும். அதுதான் சரியான நிவாரணம். 26 பேரை கொன்றதற்கு 26000 பயங்கரவாதிகளையும், அந்த நாய்களுக்கு உதவிய உள்நாட்டில் இருக்கும் துரோகிகள் 26000 பேரை ராணுவம் போட்டுத்தள்ளவேண்டும். அப்போதுதான் பயங்கரவாதிகளால் கிள்ளப்பட்ட அந்த 26 பேரின் ஆன்மா சாந்தியடையும். 140 கோடி இல்லையில்லை 100 கோடி மக்களின் கோபம் தணியும்.


KRISHNAN R
மே 01, 2025 21:18

ஹலோ ,,,,.......காப்பகமாக..... இங்க ஒருதரு பாத்தா சந்தேகமா இருக்கு


visu
மே 01, 2025 20:58

ஏதாவது திட்டலாம் என்று திறந்தால் ஏற்கனவே காறி உமிழ்ந்து கொண்டு உள்ளார்கள் அதுக்கு மேல ராகுலை என்ன செய்வது...


ManiK
மே 01, 2025 20:43

வந்துட்டானுங்க பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டு மக்களை குழப்ப!!. இந்த ராவுல் ஊற்றும் எண்ணெய் தீவிரவாதிகளுக்கு அல்வா மாதிரி.. காங்கிரஸ் ராவுலை அடக்க வேண்டியது அவசியம்.


Barakat Ali
மே 01, 2025 20:42

தனது அபிஷியல் தந்தையை தியாகியாக்கப் பார்க்கிறார் .....


kumarkv
மே 01, 2025 20:15

அப்புறம் வேற ஏதவது இருந்தால் இப்பவே சொல்லிடுங்க.


Nagarajan S
மே 01, 2025 19:54

எதிர்க்கட்சி தலைவர் என்றால் தேவையில்லாத கருத்துக்களை கூறிவிடலாமா? முதலில் உங்கள் ஆட்சியில் உங்கள்பாட்டி இந்திரா காந்திக்கும் உங்கள் தந்தை ராஜிவ் காந்திக்கும், அவர்கள் தீவிரவாதிகளால் கொல்ல ப்பட்ட போது உங்கள் ஆட்சியில் தியாகி பட்டம் கொடுத்தீர்களா?


GMM
மே 01, 2025 19:37

வெளி நாட்டில் இருந்து விசாரித்த தேச பக்தர். ராகுலின் மனது பிஜேபி கட்சி மீது சிறுபான்மை வெறுப்பு உமிழ ஒரு பிரச்சார கருவி, தியாகி அந்தஸ்து. முதலில் ஜம்மு - காஸ்மீர் உமர் பின் காங்கிரஸ் ஆளும் கர்நாடகம் வழங்க ஆவன செய்யவும். காங்கிரஸ் எந்த தேர்தலிலும் டெபாசிட் வாங்கினால் கூட ஆபத்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை