உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொகுதிக்கு போங்க; எம்.எல்.ஏ.,க்களுக்கு கெஜ்ரிவால் அறிவுறுத்தியதாக மனைவி தகவல்

தொகுதிக்கு போங்க; எம்.எல்.ஏ.,க்களுக்கு கெஜ்ரிவால் அறிவுறுத்தியதாக மனைவி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எம்.எல்.ஏ.,க்கள் தங்களது தொகுதிக்கு சென்று மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து தீர்க்க வேண்டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளதாக, அவரது மனைவி தெரிவித்தார்.டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் இருக்கும் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா மூலம் எம்.எல்.ஏ.,க்களுக்கும், கட்சியினருக்கும் செய்தி அனுப்பி வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gd965j1p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், சுனிதா வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியுள்ளதாவது; கெஜ்ரிவால் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் செய்தி அனுப்பி உள்ளார். நான் சிறையில் உள்ளதால், டில்லி மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் தங்களது பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்க்க வேண்டும். இவ்வாறு சுனிதா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Pugazh
ஏப் 04, 2024 21:29

இவர் என்ன முதல்வராக ஆகிவிட்டோம் என்று நினைப்பா?இவரையும் இவரது கணவரையும் சிறப்பு விசாரணைக்குள் கொண்டுவந்து "உரிய" முறையில் விசாரித்தால் நாட்டிற்கு எதிரான அதிர்ச்சி தகவல்கள் கண்டிப்பாக வரும்.


vidhu
ஏப் 04, 2024 16:03

அடுத்த ராபரிதேவி


sethu
ஏப் 04, 2024 13:46

கேஜரிவால் நீங்க சிறையில் இருப்பதால் மக்களுக்கு நல்லதுதான் நடக்கிறது நீங்க உங்கள் திருட்டு தொழிலை சிறையிலும் ஆரம்பித்துவிட்டு விடாதீர்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை