உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  கோவா விடுதி தீ விபத்து பங்குதாரர் டில்லியில் கைது

 கோவா விடுதி தீ விபத்து பங்குதாரர் டில்லியில் கைது

பணஜி: கோவாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 25 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தலைமறைவான விடுதியின் பங்குதாரர் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, 'பிர்ச் பை ரோமியோ லேன்' இரவு விடுதியில், கடந்த 6ம் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் விடுதி ஊழியர்கள் 20 பேர், வாடிக்கையாளர்கள் ஐந்து பேர் என மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவா போலீசார் வழக்கு பதிவு செய்து விடுதி உரிமையாளர்கள் கவுரவ் லுாத்ரா, சவுரப் லுாத்ரா ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்கள் தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்திற்கு தப்பி சென்றனர். அவர்களை கைது செய்ய சர்வதேச போலீசான, 'இன்டர்போல்' மூலம், 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்க கோவா போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே விடுதியின் பங்குதாரராக உள்ள இணை உரிமையாளர் அஜய் குப்தாவை போலீசார் தேடிவந்தனர். தலைமறைவானவரை அவரது சொந்த ஊரான டில்லியில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், டில்லி லாஜ்பால் நகரில் உள்ள மூளை மற்றும் முதுகெலும்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். அங்கு முதுகெலும்பு காயம் அடைந்ததாக கூறி, போலியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். இரவு விடுதியின் மேனேஜர் ராஜீவ் மோடக், உட்பட நான்கு ஊழியர்கள் ஏற்கனவே கைது செய்யப் பட்டுள்ள நிலையில், தற்போது அஜய் குப்தா கைது செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை