உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவா அயர்ன்மேன் போட்டி: நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் அசத்திய அண்ணாமலை

கோவா அயர்ன்மேன் போட்டி: நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் அசத்திய அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பனாஜி: கோவாவில் நடந்த 'அயர்ன்மேன் ' போட்டியில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் அசத்தினார்.கோவாவில் கடந்த பல ஆண்டுகளாக அயர்ன்மேன் 70.3 டிரையத்லான் பந்தயம் நடந்து வருகிறது. இது நீச்சல் (1.9 கிமீ), சைக்கிள் ஓட்டுதல் (90 கிமீ) மற்றும் ஓட்டப்போட்டி(21.1 கிமீ) ஆகியவற்றை உள்ளடக்கிய கடினமான சர்வேதேச விளையாட்டு நிகழ்வு ஆகும். இந்தப் போட்டி பல சர்வதேச வீரர்கள் உட்பட சுற்றுலா பயணிகளையும் ஈர்த்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tomxn7s3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இந்தாண்டு நடக்கும் போட்டியில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார்.இதில், 1.9 கி.மீ., தூர நீச்சல் போட்டியில் அண்ணாமலை 55:20 நிமிடங்களில் கடந்தார். இதனைத் தொடர்ந்து 90 கி.மீ., தூரம் சைக்கிள் போட்டியில் பந்தய தூரத்தை 3:14:33 மணி நேரத்தில் கடந்தார். 21.1 கி.மீ., தூர ஓட்டத்தையும் வெற்றிகரமாக கடந்து முடித்தார். மூன்று போட்டிகளையும் சேர்த்து 8 மணி நேரம் 13 நிமிடங்களில் அண்ணாமலை கடந்தார். இந்த போட்டியில் அண்ணாமலை பங்கேற்றது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

பாஜ எம்பியும் பங்கேற்பு

அதேபோல், பாஜ எம்பியும், அக்கட்சியின் தேசிய இளைஞர் அணி செயலாளருமான தேஜஸ்வி சூர்யாவும் கோவா அயர்மேன் போட்டியில் இரண்டாவது முறையாக பங்கேற்றார்.

பிரதமர் வாழ்த்து

அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு: கோவாவில் நடந்த அயர்ன்மேன் பந்தயத்தில் நமது இளைஞர்கள் பங்களிப்பதை பார்க்க பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இது போன்ற நிகழ்வுகள் 'FitIndia' இந்தியா இயக்கத்துக்கு பங்களிக்கின்றன. பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.https://x.com/narramodi/status/1987555806959788385கோவாவில் நடந்த 'அயர்ன்மேன்' டிரையத்லானை பாஜ நிர்வாகிகள் அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் வெற்றிகரமாக முடித்ததை பார்த்ததில் மகிழ்ச்சி. இவ்வாறு அந்தப்பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.அண்ணாமலை நன்றிஅண்ணாமலை வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவு;என் அன்புக்குரிய பிரதமர் மோடி, பிட் இந்தியா என்ற இயக்கத்தின் மூலம் நமது நாட்டின் இளைஞர்களின் ஒரு தலைமுறையை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. உங்கள் தலைமையின் கீழ், உடற்பயிற்சி ஒரு தேசிய இயக்கமாக மாறி உள்ளது. ஆரோக்கியமான மற்றும் வலுவான பாரதம் என்ற நோக்கத்தில் அனைத்து தரப்பு மக்களையும் இந்த இயக்கம் ஒன்றிணைக்கிறது.உங்களின் உத்வேகத்திற்கு நன்றி கூறுகிறோம். மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த பயணத்தில் எங்களின் சிறு பங்களிப்பை வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.இவ்வாறு அண்ணாமலை அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

metturaan
நவ 10, 2025 15:05

விளம்பர அரசியல்


Sun
நவ 10, 2025 08:44

அண்ணா நீங்க எங்கே போய் எப்படி ஓடினாலும் சரி ! இயற்கை விவசாயம் செய்து கால்நடைகளுக்கு உணவு அளித்தாலும் சரி! வெளி நாட்டில் போய் அரசியல் பாடம் படித்து விட்டு வந்தாலும் சரி! இனி பா.ஜ.க மேலிடம் உங்களை கண்டு கொள்ளப் போவதில்லை! ஏன்னா உங்களப் பத்தி நல்லாவே மேலிடம் புரிஞ்சுக்கிட்டாங்க!


Balaji
நவ 10, 2025 11:35

இந்த சாதனைகளை, முதல்வர், முன்னமே செய்து விட்டார்.


dinamalar@dinamalar.com
நவ 10, 2025 07:21

எதிர்காலத்தலைவர்கள்


மணிமுருகன்
நவ 09, 2025 23:35

அருமை வாழ்த்துக்கள் வரவேற்கிறேன்


sundarsvpr
நவ 09, 2025 21:20

திறமையானவர்கள் போற்றப்படவேண்டும். பி ஜெ பி தமிழ்நாட்டில் அதுவும் தேசியகட்சி வளர்ந்துள்ளது என்றால் அண்ணாமலை முக்கிய புள்ளி, இதனை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துஉள்ளனர். புரிதலுக்கு நிச்சியம் பரிசு கிடைக்கும்


Barakat Ali
நவ 09, 2025 20:24

பல துறை நிபுணர்கள் அரசியலுக்கு லாயக்கில்லாதவர்கள் ..... எங்க துக்ளக்கார் மாதிரி வாய் ஒன்றே மூலதனமாக இருக்கணும் .....


S.L.Narasimman
நவ 09, 2025 19:38

சுப்பிரமணிசார்கூட மராத்தான் நடை போட்டியில் வல்லவர்தான். அதுக்கென்று நல்ல மந்திரி ன்னு சொல்ல முடியமா


Sangi Mangi
நவ 09, 2025 18:35

இதில், 1.9 கி.மீ., தூர நீச்சல் போட்டியில் அண்ணாமலை 55:20 நிமிடங்களில் கடந்தார்... விடாமல் செய்தாரா? இல்ல விட்டு விட்டு ரெஸ்ட் எடுத்து விட்டு செய்தாரா?


வாய்மையே வெல்லும்
நவ 09, 2025 19:11

நீங்க சின்னசுடலைக்கு அரசியலில் சட்டை கிழிந்தால் தையல் ஓட்டுப்போடும் ஆசாமி இருநூறு ருபாய் அண்டிப்பிழைப்புநடத்திட்டு .. கேட்கிறாறு டீடைலு.


S Kalyanaraman
நவ 09, 2025 19:18

விட்டிவிட்டு ரெஸ்ட் எடுப்பது என்றால் இடையே டீக்கடையில் டீ போண்டா சாப்பிட்டு தொடர முடியுமா?


Sangi Mangi
நவ 09, 2025 18:32

இது பேட்டரி சைக்கிள் தானே,,, அக்ஸிலக்டர் கொடுத்ா அதுவா எவ்வளவு துரமானாலும் போகும்ல? பெடல் சும்மா டம்மி .......


V Venkatachalam, Chennai-87
நவ 09, 2025 19:59

அள்ளி வுடு. மேன் யாரு கேக்கப்போறா? முகஸ் அள்ளி வுடுறதை விட அதிகமா அள்ளி வுடு மேன். எத்தனை கேனையன்கள் இருக்கான்கள்? அத்தனை கேனையன்களும் நாம சொல்றத காதை பொத்திக்கொண்டு கேட்பான்கள். அப்பறம் என்ன அள்ளி வுடு..


vivek
நவ 09, 2025 20:01

கொத்தடிமை சொங்கி ...அது மிதிச்சதான் ஓடும்....


bharathi
நவ 09, 2025 18:10

The real hero


சமீபத்திய செய்தி