உள்ளூர் செய்திகள்

தங்கவயல்

பயனற்ற போராட்டம்!

கோல்டு தொகுதியின் கேசம்பள்ளி கிராம பஞ்சாயத்து அதிகாரி, பில் கலெக்டர் என இருவரும் லஞ்சம் வாங்கியதாக வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பரவியது. அவங்க பேரில் தாலுகா பஞ்சாயத்து, ஜில்லா பஞ்சாயத்து அதிகாரிகள் இடம் புகார் செய்தாங்க .ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கலன்னு சொல்லி சில கிராமத்தினர் போராட்டமும் நடத்தினாங்க. ஆனாலும், கிராம அதிகாரியை அசைக்க முடியலயாம். போராட்டம்நடத்தியும் பிரயோஜனமே இல்லைன்னு தெரிஞ்சு போச்சாம். போராட்டக்காரர்கள் நொந்துட்டாங்களாம்.

சட்டத்தை அவமதிக்கலாமா?

பிளக்ஸ் பேனர்கள் எங்குமே வைக்க கூடாதென ஹைகோர்ட் உத்தரவு இருக்குது. ஆனால், அந்த உத்தரவை யார் தான் மதிக்கிறாங்க. இறந்தவர் தகவலை தெரிவிக்கிற 2×3 அடி சிறிய பேனரை ஓரிரு நாள் கூட விடுவதில்லை; அகற்றி விடுறாங்க.ஆனால், அரசியல் வாதிகள் வைக்கிற பிரமாண்டமான பேனர்களுக்கு எந்த நீதிமன்றம் உத்தரவு போடுதோ தெரியலயே. பேனர் வைக்க அனுமதிக்கிற ஆபிசர்கள் மீது தான் நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேணும்னுசட்டத்தை மதிக்கிறவங்க பேசுறாங்க.கோல்டு நகரின் முக்கிய சாலைகளில் பேனர்கள் இல்லாத நாளே இல்லை. முனிசி., போலீசு என யாருமே கண்டுக்கிறதில்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எல்லாமே பேனர் வைக்கும்விஷயத்தில் ஒண்ணுப்போலவே செயல்படுறாங்க.

தீருமா வீடு பிரச்னை?

சுரங்க குடியிருப்பின் வீடுகள் பிரச்னையில் தீர்வு வேண்டும். அதிலும் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று ஒரு சிலர் மட்டுமே பேசி வராங்க.பலர் வாயை திறக்காமல் மவுனமாகவே இருக்காங்களே என, பல கட்சித் தலைவர்கள் மீது அதிருப்தியும் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டுமே உரிமையை காட்டி ஓட்டு கேட்கிறாங்க. ஆனால், மக்கள் பிரச்னை வந்தால் நமக்கென்ன போச்சு என்று முடங்கிடுறாங்களேன்னு தொழிலாளர் மத்தியில் பேசுறாங்க. தேர்தல் நேரத்து ஸ்டெண்டாக இல்லாமல் வாழ்வாதாரத்துக்கு உறுதியான தீர்வாக இருக்க வேணும்னு பலரும் எதிர்பாக்குறாங்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை