உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கம் மாயமான வழக்கு: தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைது

தங்கம் மாயமான வழக்கு: தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைது

திருவனந்தபுரம்: நவ. 12-: கேரளாவின் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், துவாரபாலகர் சிலை மற்றும் தங்க கதவை புதுப்பிக்கும் பணி, 2019ல் நடந்தது. அப்போது, 4.50 கிலோ தங்கம் மாயமானது குறித்து கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை உள்ளூர் போலீசார் விசாரித்த நிலையில், எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இடைத்தரகர் உன்னி கிருஷ்ணன் போத்தி, இரு மூத்த அதிகாரிகள், ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் வாசுவை எஸ்.ஐ.டி., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இது குறித்து தேவசம் போர்டு வட்டாரங்கள் கூறியதாவது: இரு முறை தேவசம்போர்டு கமிஷனராக பதவி வகித்த வாசு பின்னர் அதன் தலைவராகவும் பணியாற்றிஉள்ளார். தங்கம் மாயமான வழக்கில் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு தற்போது வாசு கைது செய்யப்பட்டு உள்ளார். கைதான இவர் மாநில அரசின் மூத்த தலைவர்களுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

duruvasar
நவ 12, 2025 10:00

தலைவனுக்கு தெரியாமல் எந்த திருட்டும் நடக்காது என்பது தெரிகிறது.


m.arunachalam
நவ 12, 2025 08:58

எந்த பெயரில் உள்ள கடவுளும் தங்க கவசம் கேட்பதில்லை . பல வழிகளிலும் வசூல் செய்து உபரி பணம் உள்ளபோதுதான் இந்த பிரச்சனைகள் வரும் . தெளிதல் நலம் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை