உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயல் செக் போஸ்ட்!

தங்கவயல் செக் போஸ்ட்!

மண்வாரி இயந்திரம் தயாரிப்பு ஆலையில், தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து 26 நாட்கள் ஸ்டிரைக் நடத்தினாங்க. இதனால் என்னென்ன இழப்பு ஏற்பட்டது என்பதை பட்டியலிட்டு தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களின் 3வது அணி என்ற பெயரில், 'பிட்' நோட்டீஸ் வெளியிட்டு இருக்காங்க. உண்மையை சொல்லி இருப்பதாக பல பேரை பேச வெச்சிருக்கு.போராட்டத்தின்போது யானை பலம் இருப்பதாக காட்ட நினைத்த செங்கொடி காரர்கள் மற்ற கொடிகள் எதுவும் நுழைஞ்சிடாமல் பார்த்துக் கொண்டாங்க. ஆனா, நயா பைசா கூட பயனில்லாமல் போராட்டம் முடிஞ்சிடுச்சே. இதில் தங்களை முன்னிலைப்படுத்தி கொண்ட சங்கத் தலைவர்கள் எங்கே என்று தொழிலாளர்கள் தேடுறாங்க. போராட்டம் மூலம் கிடைத்த வசூல் தொகை என்னாச்சுன்னு கணக்கு கேட்கிறாங்க. மைனிங் பகுதியில் கென்னடிஸ், ஹென்றீஸ், சாம்பியன், மாரி குப்பம் என நான்கு இடங்களில் மகப்பேறு மருத்துவமனை இருந்தது. இருந்ததை எல்லாம் மூடும் வழக்கமான நகரில், மகப்பேறு மருத்துவமனையையும் மூடிட்டாங்க. 3 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரேயொரு மகப்பேறு மருத்துவமனை ரா. பேட்டையில் மட்டுமே இருக்குது. கோல்டு சிட்டி மக்கள் தொகையில் சரிபாதி மக்கள் தொகை வாழும் இடமாக மைனிங் பகுதி இருந்தும், இருந்த ஒரேயொரு மகப்பேறு மருத்துவமனையும் இல்லாமல் செய்துட்டாங்க.'இது மிக அவசியம்' என மக்கள் பிரதிநிதிகள் யாரும், அரசிடம் கேட்டு பெறலயே. சுரங்க குடியிருப்பு பகுதியின் அத்தியாவசிய தேவைகள் எப்போது, யாரால் கிடைக்க போகுதோ. மாநில அரசின் 'நம்ம கிளினிக்' கோல்டு சிட்டி பகுதியில் வராதா. பல்வேறு சலுகைகளை பெற்ற சிட்டியில் ஒவ்வொன்றாக இழந்த லிஸ்ட்டில் மகப்பேறு மருத்துவமனையும் சேர்ந்தாச்சு. இதை மீண்டும் பெறுவதற்கு யார் பிறந்து வர போறாங்களோ?மாநிலத்தில் சட்டபிதா வந்து சென்ற இடங்களில் எல்லாம் நினைவு மண்டபம் கட்டுவதாக பூ ஆட்சியில் நிலமும், அதற்கான தொகையும் ஒதுக்கினாங்க. கோல்டு சிட்டியில் அவர் வந்து சென்ற புத்த சங்க கோவிலும் சாட்சியாக இருக்குது.ஆனால், இதுக்காக மாநில அரசு ஒதுக்கிய இடத்தை, தொழிற்பூங்கா அமைக்க பறித்துக் கொண்டாங்க. அந்த நிதி என்னானது. எதுக்கு பயன்படுத்திக்கிட்டாங்கன்னு தெரியலையே. கோல்டு சிட்டியில் இந்த ஆண்டு தான் குடியரசு தின விழாவை முன்னிட்டு பலர் சட்டப் பிதா சிலைக்கு மாலைகள் அணிவித்து கொண்டாடினாங்க. இவங்களுக்காவது பூ அரசு ஒதுக்கிய நிதி மற்றும் நினைவு மண்டபம் கட்டுவதற்கான நிலம் பற்றி கேட்க ஞாபகம் வரலையே.

ஞாபகம் வரலையே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ