புதுடில்லி: நேர்காணலில் ஏ.ஐ., உதவியுடன் மோசடி நடப்பதற்கு, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கவலை தெரிவித்தார். அவர், ''இனி நேரில் நேர்காணல் நடத்தும் முறையை மீண்டும் கொண்டு கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது'' என்றார்.அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் தங்களுடைய பணிகளுக்கு ஆட்களை வேலைக்கு தேர்வு செய்யும் முறையை ஆன்லைனில் நடத்தி வருகிறது. இதனால் நேர்காணல்கள் ஆன்லைன் வாயிலாக நடக்கிறது. இதனை தனக்கு சாதகமாக, நே ர்காணலின் போது பல்வேறு பொறியாளர்கள் ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் ஆன்லைனில் வெளிப்படுத்தும் திறமைகள் ஒன்றாகவும், பணிக்கு சேர்ந்த பிறகு அவரது செயல்பாடுகள் வெவ்வேறாகவும் இருக்கிறது. இதனால் இந்நிறுவனங்கள் பெரிய பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகிறது. ஆன்லைன் முறையில் நேர்காணல் நடத்தும்போது பல்வேறு நபர்களும் நவீன கருவிகளை பயன்படுத்தி கேமராவை ஆன்மோடில் இருப்பது போலவே வைத்து ஏ.ஐ.,யை பயன்படுத்தி கோடிங் தொடர்பாக கேட்கப்படும் கேள்விக்கு எளிதாக பதில் அளித்து வருகிறார்கள். எனவே அந்த நபர்களின் உண்மையான திறமையை கண்டுபிடிக்க முடியாமல் பெரிய நிறுவனங்கள் தற்போது தவித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அவர் கூறியிருப்பதாவது: ''இனி தங்கள் நிறுவனத்தில் இன்ஜினியர்கள் மற்றும் ப்ரோகிராமிங் பணிகளுக்கு ஆட்களை வேலை தேர்வு செய்யும்போது நேரடியாக அவர்களை அழைத்து நேர்காணல் செய்ய வேண்டும். ஆன்லைனில் நேர்காணல் செய்ய வேண்டாம்''. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மேலும் அவர், '' கூகுளில் வேலைக்கு சேர வேண்டும் என விண்ணப்பம் செய்பவர்களுக்கு குறைந்தது ஒரு நேர்காணல் ஆவது அவர்கள் நேரில் வந்து கலந்து கொள்ளும் படி இருக்கும். எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேரக்கூடிய நபர்களுக்கு கணினி அறிவியல் தொடர்பான அடிப்படை புரிதல் இருப்பதை உறுதி செய்வதற்காக இப்படி ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார். ஆய்வில் அம்பலம்
அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆன்லைன் நேர்காணலில் கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கு அதிகமான நபர்கள் ஏ.ஐ.,யை பயன்படுத்தி மோசடி செய்து வேலையை வாய்ப்பு பெறுவதாக தெரிவிக்கிறது. நேரில் தான்…!
தற்போது கூகுள் நிறுவனம் மட்டுமல்லாமல் அமேசான், சிஸ்கோ, டெலாய்ட், மெக்கன்சி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆன்லைன் நேர்காணல் முறையை கைவிட்டு நேரடியாக மட்டுமே நேர்காணல் நடத்த துவங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.