உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்சி மாற அழைப்பு: சுஷில்குமார் ஷிண்டே பேட்டி: பா.ஜ., மறுப்பு

கட்சி மாற அழைப்பு: சுஷில்குமார் ஷிண்டே பேட்டி: பா.ஜ., மறுப்பு

மும்பை: பா.ஜ.,வில் சேர தனக்கு இரண்டு முறை அழைப்பு வந்தது எனவும், ஆனால், நான் காங்கிரஸ் விசுவாசி என்பதால், கட்சியில் இருந்து ஒரு போதும் விலக மாட்டேன் என முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். ஆனால், அப்படி அழைப்பு ஏதும் விடுக்கவில்லை என பா.ஜ., விளக்கம் அளித்துள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவரும், மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவருமான சுஷில்குமார் ஷிண்டே, மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: எனக்கும், எனது மகள் பிரணிதிதை ( மஹா., எம்.எல்.ஏ.,)க்கும் பா.ஜ.,வில் இணையும்படி இரண்டு முறை அழைப்பு வந்தது. நான் எப்படி கட்சி மாறுவேன்? எனது வாழ்க்கை முழுவதையும் காங்கிரசுக்கு அர்ப்பணித்தவன். அப்படி இருக்கையில் வேறு கட்சிக்கு எப்படி செல்வேன். அப்படி ஒரு எண்ணம் இல்லை என்றார்.

யார்

இது தொடர்பாக நிருபர்கள் அவரிடம், உங்களை பா.ஜ.,விற்கு அழைத்தது யார்? என கேள்வி எழுப்பினர்.அதற்கு ஷிண்டே, அவரின் பெயரை வெளியிட மறுத்ததுடன், அவர் பெரிய பதவியில் உள்ளவர் என்றார். மேலும், , நான் தீவிர காங்கிரஸ் காரன். எனது கட்சியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என அவரிடம் கூறிவிட்டேன் என்றார்.

விளக்கம்

இது தொடர்பாக மஹா., மாநில பா.ஜ., தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், ஷிண்டேவையும், அவரது மகளையும் பா.ஜ.,வில் இணையும்படி யாரும் அழைக்கவில்லை என்றார்.

சந்திப்பு

இதனிடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், சுஷில் குமார் ஷிண்டேவை சந்தித்து பேசினார். இலக்கிய விழா தொடர்பான அழைப்பிதழை ஷிண்டேவிடம் வழங்கவே,பாட்டீல் சந்தித்ததாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
ஜன 19, 2024 06:54

எல்லா அரசியல் கட்சியினரும் அயோக்கியர்கள், அரசியல் லாபத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.இதில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்ற போட்டி தேவையா?


தாமரை மலர்கிறது
ஜன 19, 2024 00:45

பிரேமலதாவிடம் கற்றுக்கொண்டுள்ளார். என்னை மதுரையிலே கூப்பிட்டாக, என்னை ஜப்பான்ல கூப்பிட்டாக, மன்னார்குடியில கூப்பிட்டாக என்று ஷிண்டே அள்ளிவிடுகிறார். அப்பத்தான் ராகுல் மரியாதை கொடுப்பார் என்று நினைப்பு.


sankaranarayanan
ஜன 18, 2024 21:22

இவர் கட்சி மாறாமல் காங்கிரசில் இருப்பதே நல்லது காங்கிரசில் ஒரு சிண்டு பா ஜா பாவில் கூட்டணியின் ஒரு சிண்டு தனித்தனியே இரு சிண்டுகள் இருந்தால்தான் நல்லது சிண்டு முடிய வேண்டாம்


Rajasekar Jayaraman
ஜன 18, 2024 19:10

திருட்டு திராவிஷ கூட்டத்திடம் பாடம் படித்த கூட்டம்.


Duruvesan
ஜன 18, 2024 18:14

டெபாசிட் வாங்க .... காங்கிரஸ் கட்சியே சீட் கொடுக்கல, நீ ஏன் பீத்திக்கிறீங்க


Shankar
ஜன 18, 2024 15:51

வருகிற நாடாளுமன்ற தேர்தல்ல சீட்டை கொடுங்க இல்லாட்டி பாஜகவிற்கு தாவிவிடுவேன்னு காங்கிரசுக்கு சிக்னல் தராரோ என்னவோ?


R Kay
ஜன 18, 2024 15:33

அப்படியா? நாடே மறந்துவிட்ட கூடவா பாஜக அழைக்கிறது?


jss
ஜன 18, 2024 14:09

இவரை கூப்பிடும் அளவுக்கு இவர் ஒன்றும் அப்பீடக்கர் இல்லை. மேலும் காங்கிரஸ்ஸிலேயே இவர் மீது பெரிய மரியாதை இல்லை. இவர் கடந்த லோக்சபா தேர்தலில் சிறுபான்மை சமூகத்தை உயர்த்தும் வகையில் மராட்டி இந்து அர்ச்கர்களை இழிவுபடுத்திய செயலை மராட்டுயர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதை உவருடம் எடுத்துக்கூறவும். 2014 தேர்தலில் இதற்க்காக இவர் தோற்றது இவருக்கு மறந்திருக்காது என்று நம்புவோம்


ஆரூர் ரங்
ஜன 18, 2024 13:59

ஊடகத்தில் பேரு வரணும். அதுக்காக ரீல்.


Nandakumar Naidu
ஜன 18, 2024 13:49

0 ...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ