உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கு திரும்ப பெற அரசுக்கு அனுமதி

ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கு திரும்ப பெற அரசுக்கு அனுமதி

புதுடில்லி:ஆம் ஆத்மி ஆட்சியில் மத்திய அரசு மற்றும் துணை நிலை கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, பா.ஜ., அரசு திரும்பப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.தலைநகர் டில்லியில் சேவைகள் மீதான கட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் துணை நிலை கவர்னருக்கு எதிராக, முந்தைய ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில், ஏழு வழக்குகள் தாக்கல் செய்திருந்தது.இந்த வழக்குகளை திரும்பப் பெற, டில்லி அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாஸி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.வழக்குகளை திரும்பப் பெற அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை