உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எனக்கு அதிகாரம் இல்லையா; பொறுத்திருந்து பாருங்க: துணிந்து விட்டார் கேரள கவர்னர்

எனக்கு அதிகாரம் இல்லையா; பொறுத்திருந்து பாருங்க: துணிந்து விட்டார் கேரள கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'எனக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்' என கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் பதிலடி கொடுத்தார்.கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் 150 கிலோ தங்கம் மற்றும் ரூ.123 கோடி மதிப்புள்ள ஹவாலா பணம் மாநில போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் தேச விரோத செயல்களுக்காக கேரளாவுக்கு நுழைகிறது என முதல்வர் பினராயி விஜயன் கூறியது பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக, தன்னிடம் தெரிவிக்காதது ஏன் என்று முதல்வர் பினராயி விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் கேள்வி எழுப்பி இருந்தார். கவர்னரின் நேரடி தலையீடு விதிகளுக்கு முரணானது என பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இது குறித்து, இன்று(அக்.,10) கவர்னர் ஆரிப் முகமது கான் நிருபர்கள் சந்திப்பில், ' மாநிலத்தில் தேச விரோத செயல்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற விஷயங்கள் ஜனாதிபதியிடம் தெரிவிக்க வேண்டும். எனக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். முதல்வரிடம் இருந்து திருப்திகரமான பதில் வரும் வரை விட மாட்டேன். அரசியல் காரணங்களுக்காக முதல்வர் பினராயி பொய்களை பரப்புகிறார். அவர், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை மறைக்கிறார்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தாமரை மலர்கிறது
அக் 10, 2024 18:55

இந்தியாவின் அரசியல் அமைப்புப்படி முதல்வர் பதவியென்பது வெறும் மேயர் பதவி தான். கேரளாவின் மேயர் தான் பினராய் விஜயன். வெறுமே சொத்து வரியை மட்டுமே வசூலிக்க முடியும். லோக்கல் போலீசை தவிர வேறெந்த அதிகாரமும் கிடையாது. பிரதமருக்கு தான் அனைத்து பவரும் உள்ளது. பிரதமரின் செயலாளராக அமர்த்தப்படும் கவர்னருக்கு கேரளா மேயர் பினராயை விட அதிக பவர் உள்ளது.


GMM
அக் 10, 2024 13:12

150 கிலோ தங்கம். 123 கோடி ஹவாலா பணம். தேச விரோத செயலுக்கு கேரளா உள் நுழைவு. மாநில போலீஸ் தேச விரோத நடவடிக்கை அறிவது கடினம். மத்திய அரசிடம் தான் அதிகாரம் உள்ளன. கவர்னருக்கு கட்டாயம் தெரிய படுத்த வேண்டும். கவர்னர் கேள்வி , நேரடி தலையீடு கிடையாது. நீதிபதி கேட்டும் போது இப்படி கூற முடியாது. கவர்னர் பதவிக்கு கிழ் உள்ள 5 ஆண்டுகள் தாற்காலிக மாநில அரசியல் தலைமை அமைச்சர் கவர்னர், தலைமை செயலர் அதிகாரம் பற்றி கூற தகுதி அற்றவர். விஜயன் பதில் கூற கடமைப்பட்டவர்.


Lion Drsekar
அக் 10, 2024 12:14

இருக்கவே இருக்கிறது இவர்களுக்கென்றே கூட்டு வைக்க ஒரு இடம் இருக்கிறதே அதுவும் மிக உச்சத்தில் உள்ளது, வந்தே மாதரம்


Ramesh Sargam
அக் 10, 2024 12:12

கவர்னரின் அதிகாரம் என்னவென்பதை மாக்கள் பார்க்க ஆவலுடன் உள்ளனர். இப்பொழுது கவர்னர் என்றால் வெறும் கைநாட்டு, அதாவது சொல்கிற இடத்தில் கையெழுத்து போடுபவர் என்கிற எண்ணம்தான் மக்களிடத்தில். அதை மாற்றவேண்டும், உங்கள் செய்கைகளால்.


முக்கிய வீடியோ