உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கன்னட மொழி கட்டாய சட்டம்: திருப்பி அனுப்பிய கவர்னர்

கன்னட மொழி கட்டாய சட்டம்: திருப்பி அனுப்பிய கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி இருக்க வேண்டும்' என்ற கர்நாடக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் தர மறுத்த கவர்னர் தாவர்சந்த் கெலாட், சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து கொண்டு வரும்படி திருப்பி அனுப்பினார்.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, அனைத்து நிறுவனங்கள் மற்றும் கடைகளில், 60 சதவீதம் அளவுக்கு பெயர் பலகைகளில் கன்னட மொழி இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெங்களூரு மாநகராட்சியிடம் கன்னட அமைப்பினர் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து மாநகராட்சியும், 'ஜனவரிக்குள் பெயர் பலகைகளில், 60 சதவீதம் கன்னடம் இடம் பெற்றிருக்க வேண்டும்; இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்திருந்தது.ஜன., 5ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளில், 60 சதவீதம் கன்னட மொழி பயன்படுத்துவதை கட்டாயமாக்கும் கன்னட மொழி மேம்பாட்டு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசாணை வெளியிட, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கும் அவசர சட்டம் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த கவர்னர், இது தொடர்பாக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றி அனுப்பும்படி கூறி, அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார். இது தொடர்பாக துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''பெயர் பலகைகளில் கன்னட மொழியை அதிகரிக்க, அரசு சட்டம் கொண்டு வர கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.''அதில் கையெழுத்திட்டு இருக்கலாம். ஆனால், அதை அவர் திருப்பி அனுப்பிவிட்டு, சட்டசபையில் நிறைவேற்றும்படி வலியுறுத்தியுள்ளார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

DVRR
பிப் 01, 2024 16:28

பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி???அப்படியென்றால் என்ன???அப்போ 10 சென்டிமீட்டர் அகலப்பலகை என்றால் 6 சென்டிமீட்டர் கன்னடம் மீதி 4 சென்டிமீட்டரில் ஆங்கிலம் இந்தி தமிழ் இருக்கலாம் என்று சொல்கின்றதா???


ஆரூர் ரங்
பிப் 01, 2024 14:44

எல்லாத்துக்கும் அவசரச் சட்டம்????? இத்தனை ஆண்டுகள் தூங்கிக் கொண்டிருந்தீர்களோ? சட்டசபை எதற்கு இருக்கிறது? சட்டங்களை இயற்றத்தானே? ஆளுநர் கையெழுத்து போடும் மிஷினல்ல. லோக்சபா தேர்தலுக்காக விளம்பர நாடகம் இந்த மசோதா?


Indian
பிப் 01, 2024 14:04

மக்களுக்கு அரசின் பலன்களை சென்றடையாமல் தடுக்கவே இவர்கள் தென் மாநிலங்களில் தடை கல்லாக மக்களுக்கு பாரமாக இருக்கிறார்கள்


thangam
பிப் 01, 2024 12:57

கன்னட மொழி பற்றாளர்கள் அல்ல.. வெறியர்கள்


chennai sivakumar
பிப் 01, 2024 09:48

உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலம் அவ்வளவுதான். Only two language formula. தமிழகம் வழிகாட்டி. சமீபத்தில் லே பக்ஷி இருந்த Hindupur ஊருக்கு சென்று இருந்தேன். only Telugu no English or Hindi. பேருந்துகளில் அவ்வாறே. தமிழ் நாட்டில் மட்டுமே ஆங்கிலமும் தமிழும் உள்ளது. கேரளாவிலும் ஒரே முறுக்கு சுற்று உள்ளது. நல்ல வேளையாக என் துனையாருக்கு 6 மொழிகள் சரளமாக தெருந்ததால் தப்பித்தென். இல்லாவிட்டால் கோவிந்தா கோவிந்தா கோய்ந்தா


VENKATASUBRAMANIAN
பிப் 01, 2024 08:35

ஆமாம் இப்போது குஜராத்தி மராட்டி அழிந்து விட்டதாக கூறினால் எப்படி உண்மை இல்லையோ அது போலத்தான். எந்த மொழியினால் அழியாது. இது ஒரு அரசியல். இப்போது தாய் மொழியை ஒழுங்காக எத்தனை பேர் பேசுகின்றனர். சினிமா ஊடகங்களில் கொலை செய்கிறார்கள். இதை முதலில் சரி செய்யுங்கள். நம் மொழி தானாகவே வளரும். ஓட்டுக்காக கூவாதீர்கள்


அப்புசாமி
பிப் 01, 2024 07:48

முதலில் அந்தந்த மாநில மொழி அதன் அருமை தெரியாதவங்களை கெவுனராப் போடக்கூடாது.


Bellie Nanja Gowder
பிப் 01, 2024 08:43

உங்களை கவர்னாக போடலாம். போயி பிள்ளை குட்டிகளை படிக்க வைக்க பாருங்கய்யா. தி மு க காரனை போல பிதற்றி கொண்டு இருக்க வேண்டாம்.


Bellie Nanja Gowder
பிப் 01, 2024 08:47

முதலில் உங்கள் அரசை அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் வழி கல்வி தான் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற சொல்லுங்கள்.


Anand
பிப் 01, 2024 12:20

மொதல்லே உன்னோட தலைவன் பெயரை தமிழில் மாற்ற சொல்....


அப்புசாமி
பிப் 01, 2024 07:46

மசோதா போட்டு நிறைவேத்தி அனுப்பிச்சா மட்டும் அது புனிதமாயிடுமாம். கெவுனர் கையெழுத்து போட்டுருவாராம். சூப்பர் லாஜிக்.


கணேசன்
பிப் 01, 2024 07:45

சீக்கிரம் மாநிலங்கள் ஒன்றியத்திலிருந்து பிரியப் போராடும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.


Appan
பிப் 01, 2024 07:10

ஒரு மொழி ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும்..இல்லை எனின் அந்த மொழி அழிந்து விடும்..இந்தியா என்று இந்தியை மட்டும் ஆதரித்தால் மற்ற மொழி இனங்கள் அழிந்து விடும்..ஐரோப்பாவில் உள்ள நாடுகள் இந்தியாவின் மாநிலங்களை விட சிறியது..விஜய நகர பேரரசு தென் இந்தியாவை முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு இல்லாமல் சுமார் 400 ஆண்டுகள் ஆண்டு உள்ளார்கள்..இப்படி பட்ட மொழி வளர இது தேவை...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை