உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னரின் முடிவு சட்டவிரோதம்: முதல்வர் சித்தராமையா சொல்கிறார்

கவர்னரின் முடிவு சட்டவிரோதம்: முதல்வர் சித்தராமையா சொல்கிறார்

பெங்களூரு: '' கவர்னரின் முடிவு சட்டவிரோதமானது'' என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர அம்மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கி உள்ளார்.இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது: கவர்னரின் நடவடிக்கை சட்டவிரோதமானது. அரசியல்சானத்திற்கு எதிரானது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவேன். ராஜினாமா செய்யும் அளவுக்கு நான் தவறு செய்யவில்லை. ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக அரசை கவிழ்க்க பா.ஜ.,வும் ம.ஜ.த.,வும் சதி செய்கின்றன. முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் மீதும், குடும்பத்தினர் மீதும் தொடரப்பட்ட வழக்குகள், பிரச்னைகளை சட்டப்படி சந்திப்பேன். காங்கிரஸ் மேலிடம், அமைச்சரவை, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை