மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
1 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை : பெரும் சவால்கள்
3 hour(s) ago | 1
ஆயுத பூஜை விழா
3 hour(s) ago
சாலை பணி துவக்கம்
3 hour(s) ago
பெங்களூரு: பெங்களூரில் 5 வழித்தடங்களில், மெட்ரோ ரயில் சேவை துவங்குவதற்கான சாத்திய கூறுகளை ஆராயும்படி, பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக கழகத்திற்கு, கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், மெட்ரோ ரயில் சேவை உள்ளது. ஒயிட்பீல்டு - செல்லகட்டா, மாதவரா - சில்க் இன்ஸ்டிடியூட் வழித்தடத்தில் தற்போது, மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.ஆர்.வி.,ரோடு - பொம்மசந்திரா; நாகவாரா - காளேன அக்ரஹாரா; சில்க் போர்டு - கெம்பேகவுடா விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஆர்.வி.,ரோடு - பொம்மசந்திரா இடையில் மெட்ரோ ரயில் பாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.இந்த ஆண்டிற்குள் அந்த பாதையில் ரயில் சேவை துவங்கும் வாய்ப்பு உள்ளது. மற்ற இரண்டு பாதைகளும், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் செல்லகட்டா - பிடதி வரை 15 கிலோ மீட்டர்; சில்க் இன்ஸ்டிடியூட் - ஹரோஹள்ளி வரை 24 கிலோ மீட்டர்; மாதவரா - குனிகல் கிராஸ் வரை 11 கிலோ மீட்டர்; காளேன அக்ரஹாராவில் இருந்து ஜிகினி, அத்திப்பள்ளி, வர்த்துார் வழியாக காடுகோடி வரை 68 கிலோ மீட்டர்; பொம்மசந்திரா - அத்திப்பள்ளி வரை 11 கிலோ மீட்டர் என, ஐந்து வழித்தடங்களில், மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்திய கூறுகளை ஆராயும்படி, பி.எம்.ஆர்.சி.எல்.,க்கு, அரசு உத்தரவிட்டு உள்ளது.ரயில் பாதை அமைக்கும் பணிகளை ஆராய, சி.பி.டி.சி., எனப்படும் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு மாதிரி ரயிலை, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவும், மெட்ரோ ரயில் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். அடுத்த மாதம் இந்த மாதிரி ரயில், பெங்களூரு கொண்டு வரப்படும் வாய்ப்பு உள்ளது.
1 hour(s) ago
3 hour(s) ago | 1
3 hour(s) ago
3 hour(s) ago