உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2024-25ல் ரூ.22.08 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வருவாய்: 9.4 சதவீத வளர்ச்சியை எட்டி சாதனை

2024-25ல் ரூ.22.08 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வருவாய்: 9.4 சதவீத வளர்ச்சியை எட்டி சாதனை

புதுடில்லி: கடந்த 2024-25ல் ஜி.எஸ்.டி., வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.22.08 லட்சம் கோடியை எட்டி, முந்தைய ஆண்டை விட 9.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.மத்திய நிதியமைச்சகம், இன்று ஜி.எஸ்.டி., வருவாய் குறித்த புள்ளி விபரங்களை வெளியிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lzndkxv7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:2024-25ம் ஆண்டில், ஜி.எஸ்.டி., இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ.22.08 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த 2023-24ல் ரூ.20.18 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது கடந்த ஆண்டை காட்டிலும் 9.4 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.சராசரி மாதாந்திர வசூல் ரூ.1.84 லட்சம் கோடியாக இருந்தது. ஏப்ரல் 30, 2025 நிலவரப்படி, 1.51 கோடிக்கும் அதிகமான ஜி.எஸ்.டி., பதிவுகள் செயலில் உள்ளன. டெலாய்ட் கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 85 சதவீதம் பேர் ஜி.எஸ்.டி.,யுடன் நேர்மறையான அனுபவத்தைப் பதிவு செய்துள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sridhar
ஜூலை 01, 2025 13:47

சிந்தனை குறைவு உள்ளவர்கள் பாவம் GST வரி எதோ புதிதாக விதிக்கப்பட்டது அதற்குமுன் வரியே இல்லாமல் மக்கள் ஆனந்தமாக இருந்தனர் என்ற புரிதலில் இருக்கிறார்கள். GST வருமுன் விற்பனை வரி வாட் வரி என்று கிட்டத்தட்ட 36 விதமான வரிகள் நம்மீது சுமத்தப்பட்டிருந்தது என்பது பாவம் இவர்களுக்கு தெரியாது. அப்போது இருந்த வரிகளின் சதவிகிதங்களும் இப்போதையதை விட பன்மடங்கு அதிகம் என்ற விவரமும் தெரியாது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எல்லாவற்றுக்கும் இப்போது GST யின் கீழ் வரிகள் குறைவு என்பதுகூட தெரியாமல் "மக்களின் கண்ணீர்"னு ஒரு கண்ணீர்த்துளி எழுதுது GST வருவாய் உயர்ந்திருப்பதற்கு ஒரே காரணம் முன்புபோல் வரி ஏய்ப்பு செய்யமுடியவில்லை. அதனால் ஏய்ப்பையே தொழிலாக செய்துகொண்டிருந்த கும்பலுக்கு GST பெயரை கேட்டாலே அடிவயிறு பற்றி எரிகிறது. இதில் மேலும் சீர்திருத்தங்கள் தேவை என்பது மறுக்கமுடியாது என்றாலும், நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் GST வரிவிதிப்பு செய்த பங்கு ஏராளம்.


R.RAMACHANDRAN
ஜூலை 01, 2025 09:35

பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஜி எஸ் டி வரி விதிப்பில் கூடுதலாக பொருட்கள் மற்றும் சேவைகளை சேர்ப்பதால் வருவாய் கூடுதலாகிறது. மக்களின் உழைப்பை உறிஞ்சி வருவாயை பெருக்குகின்றனர். இதிலும் பலர் பல விதமாக கொள்ளை அடிக்கின்றனர்.உதாரணமாக மக்களிடம் வசூலிக்கும் வரியை அரசாங்கத்தில் வரவு வைப்பது இல்லை.


ஆரூர் ரங்
ஜூலை 01, 2025 12:32

கடைந்தெடுத்த பொய். ஜிஎஸ்டி வரி விகிதங்கள் எல்லா மாநில அமைச்சர்களின் ஒருமித்த ஒப்புதலுடன் மட்டுமே முடிவு செய்யப்படுகிறது. எந்த பொருள் அல்லது சேவைக்கும் வரி ஏற்றப்படவில்லை. 2000 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரியேயில்லை. ஜிஎஸ்டி வந்த பிறகு வரிஏய்ப்பு கடினமாகி விட்டதால் தான் வசூல் அதிகமாகியுள்ளது. இது பெரும்பாலான எதிர்கட்சி தில்லுமுல்லு ஆட்களுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வளவுதான்.


திகழ்ஓவியன்
ஜூன் 30, 2025 22:21

எல்லாம் ஏழை நடுத்தர மக்களின் கண்ணீர் தான் GST


SUBBU,MADURAI
ஜூலை 01, 2025 07:50

May GST Collection Maharashtra Gujarat = ₹39,539 crore Karnataka Tamil Nadu Telangana Kerala Andhra Pradesh = ₹34,596 crore Bharat Todo people are lying to you. All states pay taxes, within a state different districts pay different taxes within a district, cities pay more than rural parts, within a city rich people pay more than poor, that's just how taxation works. Stop using it to divide India.


R Dhasarathan
ஜூன் 30, 2025 18:07

ஒரு அரசுக்கு நிதி அமைச்சர் ஒருவரே போதும் கெட்ட பெயர் எடுத்து தர... வரி விதிப்பு மூலமாக நாட்டை வளர்க்க முடியாது என்பதை எப்பொழுது இவர்கள் உணர்வார்கள்...


Thravisham
ஜூன் 30, 2025 20:42

த்ரவிஷன்கள் சாராய மூலமே ஆட்சியை நடத்துகிறார்கள். மத்திய அரசாங்கம் தண்ணீர் மூலம் ஆட்சியை நடத்த முடியாது. வரிகள் மூலம்தான் அரசாங்கம் செலவினங்ககளை சமாளித்து/முன்னேற்றங்கள் ஏற்படத்த முடியும்.


Mecca Shivan
ஜூன் 30, 2025 20:50

பின்ன உங்கப்பன் வீடு பணத்தை எடுத்து தானம் கொடுப்பாயா மங்குனி அமைச்சரே


ஆரூர் ரங்
ஜூன் 30, 2025 17:52

உ.பி ஸ் கொதிக்க வேண்டாம். தமிழக மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் சுமார் ஐந்தரை சதவீதம் . இதில் குறிப்பிட்டுள்ள ஜிஎஸ்டி வசூலிலும் அதே ஐந்தரை சதவீதம் மட்டுமே இங்கு வசூலாகியுள்ளது. முன்னேறிய( மாநில) வ‌ர்களு‌க்கு கூடுதல் நிதி சமூகநீதிக்கு எதிரானது.


Priyan Vadanad
ஜூன் 30, 2025 17:43

இந்த வரி வசூலில் யாருக்கு லாபம்? மக்களுக்கு என்ன லாபம்? வராகடனை ஈடுகட்ட எவ்வளவு கொட்டப்பட்டது என்பதையும் குறிப்பிட்டால்தான் என்ன?


vadivelu
ஜூன் 30, 2025 18:26

பெண்களுக்கு மாதம் ரூ 1000 லாபம்தான்.


Mecca Shivan
ஜூன் 30, 2025 20:51

நீ வடநாடு அல்ல வடை நாடு .. பட்ஜெட் விவரத்தை மத்திய அரசு இணையதளிதில் போய் பாரு மக்கே


Sridhar
ஜூலை 01, 2025 14:59

வாராக்கடனை கொடுத்தது யாரு? பொருளாதார புலி அதில் ஒரு பெரும் பகுதியை மீட்டெடுத்தது டீ வித்தவர் இன்று வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன. 2014 கு முன்பு நம் வரிப்பணம் எல்லாம் அவற்றின் நஸ்டங்களை ஈடுகட்ட சென்றன. வரிவசூல் லாபத்திற்காக அல்ல, நாட்டின் பொருளாதாரத்தை திறன்பட நடத்திச்செல்வதற்க்காக, நாட்டின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக. இன்று எல்லா பொருட்கள்மீது இருக்கும் வரி விகிதம் குறைவு ஆனால் கட்டமைப்பு வசதிகளோ பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. சாத்தியப்பட்டது நேர்மையான அரசால், ஒரு டீ விற்பவரால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை