உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னா ஒரு வில்லத்தனம்... 500 ரூபாய் நோட்டில் அனுபவம் கெர் படம்: குஜராத் தொழிலதிபர் பணம் ரூ.1.3 கோடி அம்போ!

என்னா ஒரு வில்லத்தனம்... 500 ரூபாய் நோட்டில் அனுபவம் கெர் படம்: குஜராத் தொழிலதிபர் பணம் ரூ.1.3 கோடி அம்போ!

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரியான மெஹூல் தக்கரிடம் மர்ம கும்பல் ஒன்று, பாலிவுட் நடிகரான அனுபவம் கெர் படம் அச்சிட்ட போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து, ரூ.1.3 கோடி மோசடி செய்துள்ளது. மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.குஜராத்தில் பிரபல தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரி மெஹூல் தக்கர். இவருக்கு தெரிந்த ஜூவல்லரி மேலாளர் இடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. எனக்கு தெரிந்த நபருக்கு 2 கிலோவுக்கு மேல் தங்கம் தேவைப்படுகிறது என கேட்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு மேல் இருவருக்கும் வியாபார தொடர்பு இருந்து வந்துள்ளது. அதனால் அவரை நம்பிய தக்கரும் தங்கம் தருவதாக ஒப்புக்கொண்டார். https://www.youtube.com/embed/qq_vQF6PhHMஅதன்படி ஜுவல்லரி மேலாளருக்கு தெரிந்த நபர்கள், தங்க நகை வியாபாரியான மெஹூல் தக்கரிடம் 1.6 கோடி மதிப்பில் 2100 கிராம் தங்கம் வேண்டும் என தொடர்பு கொண்டுள்ளனர். முதலில் 1.3 கோடி ரூபாய் பணம் அனுப்பிய நபர்கள் அடுத்த நாள் 30 லட்சத்தை தருவதாக கூறியுள்ளனர். இந்த 1.3 கோடி ரூபாய் பணத்தையும் 26 மூட்டைகளில் கட்டி அனுப்பியுள்ளனர். இதை நம்பி 2100 கிராம் தங்கத்தை மர்ம நபர்களிடம் வியாபாரி ஒப்படைத்துள்ளார். தங்கத்தை ஒப்படைத்த பிறகு, தக்கர் ஊழியர் ரூ. 1.3 கோடி பாதுகாப்பு வைப்புத்தொகையை ஆய்வு செய்ததில், அவை போலியான நோட்டுகள் என்பதைக் கண்டுபிடித்தார். மகாத்மா காந்தியின் படத்திற்குப் பதிலாக, அந்த நோட்டுகளில் பாலிவுட் நடிகர் அனுபவம் கெர் படம் இருந்தது. ரூபாய் நோட்டு கத்தை மேலே இருந்த வங்கி ரசீதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.,) என்பதற்குப் பதிலாக 'ஸ்டார் பேங்க் ஆப் இந்தியா' என்ற முத்திரை இருந்தது.மோசடியை உணர்ந்து, தக்கரும், ஜூவல்லர்ஸ் மேலாளரும் உஷார் ஆகி, தொடர்பு கொண்ட நபரை அழைத்தபோது, ​​​​அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இப்போது வழக்கை விசாரித்து வருகின்றனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து மோசடி செய்தவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அனுபவம் கெர் அதிர்ச்சி!

இந்த சம்பவத்தை அறிந்த, பாலிவுட் நடிகரான அனுபவம் கேர், ' ரூ.500 நோட்டுகளில் காந்தியின் புகைப்படத்திற்கு பதிலாக எனது புகைப்படம்? எதுவும் நடக்கலாம்' என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

D.Ambujavalli
அக் 01, 2024 18:46

1.50 கோடிக்கு பண மூட்டை வருகிறது என்றதும் வாயைப் பிளந்திருப்பார் மூட்டையை பிரித்து random ஆக பார்க்கக்கூடத் தோன்றாத மஹா தத்தியாகவா இருப்பார்?


Mettai* Tamil
அக் 01, 2024 17:55

ஹலோ பாமரா , ஊரு ஊருக்கு சாக்கடை தான் இருக்கு , அத கடந்து தான் போகணும் . அப்புறம் சாக்கடையை கிளீன் பண்ணனும்னா பக்கத்துல தான் போகணும் ..நான் கேக்குறது தினம் வாங்குற கணக்கில் வராத பணம் எங்கு, எப்படி, செல்கிறது என்ற மேப் ......


venugopal s
அக் 01, 2024 17:03

எத்தனுக்கு எத்தன் இருப்பான்!


அம்பி
அக் 01, 2024 15:51

பாத்தா புட்டின் மாதிரி இருக்காரு. ரஷ்யாவுக்கு அனுப்பி பாக்கலாம்.


அப்பாவி
அக் 01, 2024 15:51

நாமதான் வல்லரசு ஹி..ஹி..


Radhakrishnan Seetharaman
அக் 01, 2024 15:38

அனுபவம்? ???


Balasubramanian
அக் 01, 2024 15:01

ரூ 1.60 கோடிக்கு ரொக்கம் வாங்கி தங்கம் விற்கிறார் என்றால் அது என்ன ஐந்து சதவீதம் Customs Duty கட்டிய இறக்குமதி தங்கம் ஆகவா இருக்கும்? கடத்தல் தங்கம்! திருடனுக்கு தேள் கொட்டிய கதைதான்! இப்போது விற்ற தங்கத்திற்கு வரி கேட்டு நோட்டீஸ் வரும்!


Barakat Ali
அக் 01, 2024 14:01

குஜராத்திகளை அம்புட்டு சுளுவா ஏமாத்திர முடியாதப்பு ...... வேற தினசரிகளை பார்க்கணும் ....


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 01, 2024 13:08

ரூபாய் நோட்டுக்களில் காந்தி படத்தை அகற்ற வேண்டும் என்ற பாஜகவின் கருத்துக்கு இப்படி ஆதரவு திரட்டுகிறார்களோ?


Sivagiri
அக் 01, 2024 12:45

காந்தி கணக்கை , அனுபம் கணக்குன்னு மாத்திட்டாங்களோ . ,


புதிய வீடியோ