உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு

குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு

ஆமதாபாத்: குஜராத்தில் உரிய ஆவணங்கள் இன்றி குடியிருந்த 6,500 பேரை கண்டறிந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சுமார் 450 பேர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது உறுதியானதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், சந்தோலா ஏரி பகுதியில் அவர்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளையும் நகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியது.கடந்த மாதம் டில்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அதே பகுதியை சேர்ந்த சந்த் மியா, என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள், விசா உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் இல்லாமல் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, பல்வேறு பகுதிகளில் பதுங்கி இருப்பதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து டில்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று தமிழகத்தில் நடத்திய சோதனையில் சென்னையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 33 பேரை கைது செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zvsdj86j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இந்த நிலையில் குஜராத் மாநிமல் ஆமதாபாத் மற்றும் சூரத்தில் போலீசார் நடத்திய சோதனை நடவடிக்கையில் உரிய ஆவணங்கள் இன்றி குடியிருந்த வங்கதேசத்தினரிடம் விசாரணை நடத்தினர். இது குறித்து போலீஸ் டிஜிபி விகாஸ் சஹாய் கூறுகையில், ''ஆமதாபாத், சூரத்தில் நடந்த தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்தின் அடிப்படையில் 6500 வங்கதேச மக்களிடம் விசாரணை நடத்தினோம். அதில் 450 பேர் சட்டவிரோதமாக குடியேறியது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்துள்ளோம். மீதமுள்ளவர்களிடமும் விசாரணை நடக்கிறது'' என்றார்.அங்குள்ள அம்தாவாட் நகராட்சிக்கு உட்பட்ட சந்தோலா ஏரி பகுதியில் ஆக்கிரமித்து குடியேறியிருந்த இவர்களின் வீடுகளை நகராட்சி நிர்வாகமும் இடித்து தள்ளியது. கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

thehindu
ஏப் 30, 2025 09:18

இவர்களெல்லாம் நேற்றுதான் வந்தார்களா. இவ்வளவு நாட்களாக இன்ஸ் செய்தார்கள் . விரக்தியில் அவமானத்தில் உள்ள இந்து மதவாத அரசு நாடகமாடுகிறது


venugopal s
ஏப் 29, 2025 18:23

இவர்கள் எல்லாம் பல நாட்களாக இந்தியாவில் இருக்கின்றனரா?காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் நடக்காமல் இருந்திருந்தால் இவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்திருப்பார்களோ? இப்போது காட்டும் இந்த வேகம் இதற்கு முன்பு ஏன் இல்லாமல் போனது?


C G MAGESH
ஏப் 29, 2025 17:48

இவங்க தானே விடியலின் வாக்கு வாங்கி


India our pride
ஏப் 29, 2025 16:34

தேச விரோத சக்திகளை அடக்க வேண்டும். உள் நாட்டு பாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தான கலவர கும்பல்.


chinnamanibalan
ஏப் 29, 2025 13:41

வெளிநாட்டவர் யாராக இருந்தாலும், பாஸ்போர்ட், விசா போன்ற நடைமுறை ஏதும் இல்லாமல் இந்தியாவில் துணிந்து குடியேறி வாழலாம் என்பது, இந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை மிகவும் கேள்விக்குறி ஆக்குகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும், எந்த ஒரு அரசும் கள்ளக் குடியேற்றத்தை இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்தது ஆச்சரியம் அளிக்கிறது. எனவே, முதலில் கள்ளத்தனமாக இந்த மண்ணில் குடியேறியவர்களை அரசு கண்டறிந்து, அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Kumar Kumzi
ஏப் 29, 2025 12:51

பிடிபட்ட அணைத்து பங்களாதேஷ் ரோஹிங்கியா கள்ளக்குடியேறிகளையும் உடனடியாக நாடுகடத்துங்கள்


Ramesh Sargam
ஏப் 29, 2025 12:35

அருமையான செயல். பாராட்டுக்குரிய செயல். தமிழகத்திலும், கர்நாடகாவிலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை. வேண்டுமென்றால் குஜராத்தில் வீடு இழந்தவர்களுக்கு புதுசா வீடு கட்டிக்கொடுப்பார்கள் இந்த காங்கிரஸ் மற்றும் திமுக தேசதுரோகிகள்.


Dharmavaan
ஏப் 29, 2025 12:29

இவங்களுக்கு ஆதார ரேஷன் கார்ட் கொடுத்து அனுப்பிய மம்தா பேகத்தை ... அப்போதே நாட்டில் நிம்மதி கிடைக்கும்


எம். ஆர்
ஏப் 29, 2025 12:22

தினந்தோறும் இத்தகைய செய்தி வந்து கொண்டேதான் இருக்கிறது நாட்டு மக்களிடம் இந்த அரசு வரியை மட்டும் உறிஞ்சி எடுத்துக் கொண்டு என்ன பாதுகாப்பு கொடுக்கிறது அந்த மேற்கு வங்க எல்லையில் யாருமே காவல் காப்பது இல்லையா? இல்லை எந்தவிதமான தடுப்பு அரனும் செய்யவே முடியாதா? இவ்வளவு பெரிய ஒரு நாட்டில் எந்த நாட்டுக்காரனும் ஹாயாக உள்ளே வந்து எந்த வித ஆவனமும் இல்லாமல் போலி ஆவனங்களை உருவாக்கி வீடு கட்டி வாழ்ந்து வரும் வரை இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருக்கிறது??


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2025 12:10

சுமார் இருபத்தேழு ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்தும் இந்த நிலைமையா ??


பாமரன்
ஏப் 29, 2025 13:02

என்னா தர்மராசா இப்படி சொல்லிட்டீரு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை