உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமுடி மாற்று அறுவை சிகிச்சையில் விபரீதம்; பாக்டீரியா பாதிப்பால் கேரளா இளைஞர் உயிருக்கு ஆபத்து

தலைமுடி மாற்று அறுவை சிகிச்சையில் விபரீதம்; பாக்டீரியா பாதிப்பால் கேரளா இளைஞர் உயிருக்கு ஆபத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில், வழுக்கை தலையில் முடி வளர வைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர், உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் சுனில். இவர், கடந்த பிப்ரவரி மாதம் 26 மற்றும் 27ம் தேதிகளில் கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் முடி மாற்று சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு நுழைந்தபோது, ​​அது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எண்ணி கூட பார்க்கவில்லை. இருப்பினும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நாட்களில் அவருக்கு தலையில் கடுமையான வலி ஏற்படத் தொடங்கியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=binexwn4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர், அவர் மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்த டாக்டரிடம் விளக்கினார். ஆனால் அந்த டாக்டர் சாதாரண வலி என்று கூறி, சில வலி நிவாரணி மருந்துகளை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அந்த மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகும், சுனிலுக்கு வலி போகவில்லை. இதையடுத்து கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவனைக்கு சுனில் சென்றார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பரிசோதனை செய்த டாக்டர், 'முடி மாற்று அறுவை சிகிச்சை காரணமாக அவரது தலையில் சதை உண்ணும் பாக்டீரியா வளர்ந்து வருகிறது' என கூறியதும், சுனிலும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த தனியார் டாக்டர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

13 அறுவை சிகிச்சைகள்

தற்போது, சிகிச்சை அளித்த மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. மேலும் டாக்டர் தலைமறைவாகி உள்ளார். தற்போது உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை சுனிலுக்கு ஏற்பட்டுள்ளது. சுனிலுக்கு, தோல் ஒட்டு அறுவை சிகிச்சை உட்பட அவரது தலையில் இதுவரை 13 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.கோழிக்கோட்டைச் சேர்ந்த தோல் மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறியதாவது: முடி மாற்று அறுவை சிகிச்சை போன்ற செயல்முறையை ஒரு தோல் டாக்டர் அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரால் மட்டுமே செய்ய வேண்டும். இருப்பினும், பல தகுதியற்ற மருத்துவ பயிற்சியாளர்களும் அத்தகைய சிகிச்சை முறைகளை செய்கிறார்கள். சுனில் எதிர்கொள்ளும் தொற்றுகளை நோயாளிகள் சந்தித்தால், அது மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க டாக்டர்களை அணுக வேண்டும். முடி மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சையை நீங்கள் செய்ய விரும்பினால், டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kundalakesi
மே 21, 2025 15:24

பணக்காரனை இருந்தா போதும் .. முடி எதற்கு


Ram pollachi
மே 21, 2025 14:44

பணம் அதிகம் சேர்ந்தால் தலை வழுக்கை ஆகிவிடும் இதற்கு பண சொட்டை என்று கிண்டலாக சொல்ல கேட்கலாம். போலீஸ் கிட்ட போனால் இருக்கிற நாலூ முடியும் காணாமல் போய்விடும். கோவிலுக்கு போய் தலைமுடியை எடுப்பார்கள் ஆனால் மீசையை எடுக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு பயம்.... பயம்...


nathan
மே 21, 2025 14:21

கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கணுமே


Visu
மே 21, 2025 13:51

பாகிஸ்தானில் 100 பேராம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 21, 2025 12:03

விக்கு விக்குன்னு ஒன்று விக்கிறதது. அதை வாங்கி வைத்திருக்கலாம்


தஞ்சை மன்னர்
மே 21, 2025 11:23

உபி யில் இருவர் இறந்தே விட்டனர் அது தெரியுமா


மணி
மே 21, 2025 10:38

முடி இல்லாட்டி என்ன குடி முழுகி போயிறுமா?


சுந்தரம் விஸ்வநாதன்
மே 21, 2025 11:57

திராவிட மாடலைப் பார்த்தாவது மாற்று ஏற்பாடு செய்யலாம் என்று சொல்ல வருகிறீர்களா ?