உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிக்கிறது ஹெச்.ஏ.எல்.,

எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிக்கிறது ஹெச்.ஏ.எல்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூர்: எஸ்.எஸ்.எல்.வி., எனப்படும் சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட் தயாரிப்புக்கான தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம், 'இஸ்ரோ, ஹெச்.ஏ.எல்., இன்ஸ்பேஸ்' மற்றும் 'நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்' நிறுவனங்களுக்கு இடையே நேற்று கையெழுத்தானது. இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிக்க முடிவு செய்தது. இது தொடர்பாக, கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையகமாக வைத்து செயல்படும் ஹெச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், இன்ஸ்பேஸ் எனப்படும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம், என்.எஸ்.ஐ.எல்., எனப்படும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து, பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான, தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் நான்கு நிறுவனங்களுக்கு இடையே, பெங்களூரில் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ஹெச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு, சிறிய ரக ராக்கெட் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உரிமத்தை வழங்குகிறது. உள்நாடு மற்றும் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்யும் எஸ்.எஸ்.எல்.வி., உற்பத்திக்கு ஹெச்.ஏ.எல்., பொறுப்பாகும். இதன்படி, 500 கிலோவுக்கும் குறைவாக உள்ள செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் ராக்கெட்டுகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anand
செப் 11, 2025 10:27

இஸ்ரோவை எச்ஏஎல் கெடுக்காமல் இருந்தால் சரி


vijay
செப் 11, 2025 10:06

HAL முதலில் தேஜாஸ் விமானங்களை தாமதிக்காமல் தயாரித்து கொடுக்கட்டும். அமெரிக்க என்ஜின்கல் வருவதற்கு தாமதம் என்று சாக்குபோக்கு சொல்லாமல் என்ஜினை தவிர்த்த மத்த கூடு, ரெக்கை போன்ற பாகங்களை ஒருங்கிணைத்து தயாராக இருந்தால், என்ஜின்கள் வந்ததும் பொருத்தி சோதனைகள் நடத்த எதுவாக இருக்கும். யூனியன் ஆட்கள் நேரத்துக்கு வேலை செய்யவோ, அதிக நேரம் வேலை செய்யவோ ஒத்துக்கொள்வதில்லை, எதிலும் மந்தம்தான்.


Radha Krishnan
செப் 11, 2025 07:21

வெரி குட் இம்ப்ரொயுமென்ட். குட் idea


Tetra
செப் 11, 2025 07:19

உருப்பட்டுடும்


Kasimani Baskaran
செப் 11, 2025 03:57

கம்முனிச கோட்பாடுகள் உடைய யூனியங்களை ஒழித்துக்கட்டினால் அரசு துறை கூட லாபத்தில் இயங்கும் - ஊழியர்களுக்கு ஆண்டுக்கு பல மாத போனஸ் கூட கொடுக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை