உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலங்கானாவில் அரைகுறையாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது

தெலங்கானாவில் அரைகுறையாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: தெலங்கனாவில் 8 ஆண்டுகளுக்கு முன் அரைகுறையாக கட்டப்பட்ட பாலத்தில் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது.தெலங்கானா மாநிலம் பெட்டப்பள்ளி மாவட்டத்தில் மான்ஏர் நதியின் குறுக்கே 2016-ம் ஆண்டு ரூ. 49 கோடி திட்ட மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி துவங்கி 60 சதவீதம் முடிந்தன, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கூடுதலாக ரூ. 11 கோடி நிதி ஒதுக்கியும் பாலம் கட்டும் பணிகள் முழுமையாக முடியவில்லை என கூறப்படுகிறது.சுமார் ஒரு கி.மீ. நீளத்திற்கு பெட்டப்பள்ளி, பாகுபல்பள்ளே மாவட்டங்களை இணைக்கும் வகையில் அரைகுறையாக கட்டப்பட்டு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2021ல் பெய்த கனமழை , புயலால் வலுவிழந்த நிலையில் இன்று (23.04.2024) பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது. இதன் புகைபடம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இப்பாலம் இடிந்து விழுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக இப்பாலம் வழியாக 65 பேருடன் திருமண கோஷ்டியினர் பேருந்து கடந்து சென்றதாகவும் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து நிகழவில்லை என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தத்வமசி
ஏப் 23, 2024 22:45

வளர்ச்சிப் பணிகளில் ஆட்டைய போடுவதில் அரசியவாதிகளுக்குச் சமமாக அதிகாரிகளும் இருக்கின்றனர் தேனை வழித்தவன் புறங்கையை நக்கலாம், ஆனால் தேனில் பாதியை வழித்தால் இப்படித்தான் வீணாகப் போகும்


Priyan Vadanad
ஏப் 23, 2024 20:23

யாரையா அந்த நேரத்தில் ஆட்சி செய்தது? இப்படி கட்டிப்புட்டான்?


Ramesh Sargam
ஏப் 23, 2024 20:17

ஒதுக்கப்படும் பணத்தில் முக்கால்வாசி ஆட்டைப்போட்டுவிட்டு, மிச்சத்தில் பாலம் கட்டினால் இப்படித்தான் இடிந்துவிழும் நாடெங்கும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது ஊழல் ஒழியவேண்டும் என்றால், ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் அதிகாரிகள் ஒழியவேண்டும்


sankaranarayanan
ஏப் 23, 2024 19:36

முன்பு இதே போன்று பீஹாரிலும் ஒரு பெரிய பாலம் இடிந்து விழுந்து நாசமாய் போய் மக்களுடைய பணம் எப்படி விரயமாக போகிறது பாருங்கள்.மக்களே இனியாவது நாட்டின் ஒற்றுமைக்காகவும் பொருளாதாரம் செழிப்பதற்காக மோடி அரசை பலப்படுத்துவோம் விரயம் செய்பவர்களை விரட்டி அடிப்போம்.


Priyan Vadanad
ஏப் 23, 2024 20:25

ஏன் குஜராத்துல ஒரு பாலம் உழுந்ததே , அது உங்களுக்கு தெரியாதா? சங்கர சங்கர சம்போவா


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை