| ADDED : அக் 19, 2025 06:57 PM
ஸ்ரீநகர்: 'நாட்டைப் பாதுகாப்பது எங்களுக்கு மிக முக்கியமானது. அந்த வகையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள், இதைச் செய்வது தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது போல் உணர்கிறோம்' என, எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் நாயக் சுபேதார் கைலாஷ் சிங் தெரிவித்துள்ளார்.நாளை அக்டோபர் 20ம் தேதி நாளை தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக மக்கள் முழு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், குப்வாராவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை குறித்து ராணுவ வீரர் நாயக் சுபேதார் கைலாஷ் சிங் கூறியதாவது: எங்கள் வழக்கமான பணி கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். இரவில் நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம், பகலில் சிறிது ஓய்வெடுக்கலாம். நாட்டைப் பாதுகாப்பது எங்களுக்கு மிக முக்கியமானது. அந்த வகையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள், இதைச் செய்வது தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது போல் உணர்கிறோம்.நாங்கள் நாட்டை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதன் மூலம் மக்கள் தீபாவளியை அமைதியாகக் கொண்டாட உதவியாக இருக்கிறோம். அந்த வகையில் நாங்களும் நாட்டிற்கு பங்களிப்பதாக உணர்கிறோம். தீபாவளியை நன்றாக கொண்டாட வேண்டும் என்று நான் நாட்டு மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.மேலும் ராணுவ வீரர்கள் கூறியதாவது: எல்லையில் பாதுகாப்பு பணி செய்வது, எங்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது போல் மகிழ்ச்சி கிடைக்கிறது. மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.