உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தியில் கடவுள் ராமர் சிலை நிறுவுவது மகிழ்ச்சி: முஸ்லிம் தரப்பு மனுதாரர் பேட்டி

அயோத்தியில் கடவுள் ராமர் சிலை நிறுவுவது மகிழ்ச்சி: முஸ்லிம் தரப்பு மனுதாரர் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: அயோத்தி நில வழக்கில் முஸ்லிம் தரப்பை சேர்ந்த மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரிக்கு, ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், 'அயோத்தியில் கடவுள் ராமரின் சிலையை நிறுவி, பிரதிஷ்டை செய்ய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.உத்தர பிரேதச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ராமரின் குழந்தை வடிவிலான சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார். கும்பாபிஷேகத்திற்காக நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அயோத்தி நில வழக்கில் முஸ்லிம் தரப்பைச் சேர்ந்த மனுதாரர் இக்பால் அன்சாரி என்பவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அவருக்கு ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் அழைப்பிதழ் வழங்கினர்.இது தொடர்பாக இக்பால் அன்சாரி கூறியதாவது: அயோத்தியில் கடவுள் ராமரின் சிலையை நிறுவி, பிரதிஷ்டை செய்ய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அயோத்தி ஹிந்து, முஸ்லிம், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்குமான நல்லிணக்க பூமி. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை, நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மதிக்கின்றனர். எங்கும் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடக்கவில்லை. அயோத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஜன 06, 2024 07:50

இந்த திமுகவினர் கோவிலின் வெளியே பெரியாருக்கும், கருணாநிதிக்கும் சிலை வைத்திருப்பார்கள்.


Seshan Thirumaliruncholai
ஜன 05, 2024 21:41

தற்போது உள்ள முகமதியர்களின் கிறிஸ்துவர்களின் மூதாதையர்கள் வணங்கிய தெய்வம் ராமன் கிருஷ்ணன் பரமசிவன் . இதனை நினைவில் கொண்டால் பாரத திருநாட்டில் எல்லா இதர மதத்தினர்களுக்கு இந்த தெய்வங்களின்மீது மரியாதை செய்வது ஒரு பாக்கியம்.


வெகுளி
ஜன 05, 2024 19:22

இதென்ன திராவிட மாடலுக்கு வந்த சோதனை?... இசுலாமியர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் கழகம் எப்படி வெறுப்பு அரசியல் செய்ய முடியும்?....


கனோஜ் ஆங்ரே
ஜன 05, 2024 17:34

இதத்தான்... எங்க ஊர்ப்பக்கம்.... “புது மஞ்சப் பைக்குள்ளார, பழைய பிஞ்சிப் போன செருப்ப போட்டு அடிக்குற மாதிரி”...ன்னு சொல்லுவாங்க..? இதையேத்தான் தமிழ்ச் சான்றோன் அய்யன் வள்ளுவன் “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்” அப்படீன்னு சொல்லி இருக்காரு... இது மரமண்டைகளுக்கு புரியாது.


hari
ஜன 06, 2024 05:41

உன் அவியல் சரியா வேகலை... கனோஜ்


krishnamurthy
ஜன 05, 2024 17:29

உயர்ந்த உள்ளம். உண்மையான இந்திய முஸல்மான்


Chakkaravarthi Sk
ஜன 05, 2024 16:41

இது தான் உண்மையான மத சகிப்பு உணர்வு.


மேலும் செய்திகள்