உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்து ரீல் : மாஜி கிரிக்கெட் வீரர்கள் மீது வழக்கு

மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்து ரீல் : மாஜி கிரிக்கெட் வீரர்கள் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மாற்றுத்திறனாளிகளை 'கிண்டல்' அடித்து ரீல் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றியதாக மாஜி கிரிக்கெட் வீரர்கள் மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பை நடத்தி வரும் அர்மான் அலி என்பவர் டில்லி லஜபத் நகரில் உள்ள அமர்காலணி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன்சிங், யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா ஆகிய மூவரும் இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளத்தில் ‛ரீல்' வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் மாற்றுத்திறனாளிகளை கேலி கிண்டல் செய்தும், நக்கலாக நடித்தும் காட்டியுள்ளனர்.இவர்களின் செயல் மாற்றுத்திறனாளிகளை அவமதிப்பது போன்றதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இதையடுத்து தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன்கீழான பிரிவுகளில் போலீசார் மூன்று வீரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
ஜூலை 16, 2024 02:05

இந்த மாதிரி செய்வது தவறு என்பது கிரிக்கெட் வீரர்களுக்கு புரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.


வாய்மையே வெல்லும்
ஜூலை 15, 2024 19:43

எதுக்கு இந்த வேண்டாத வேலை ஏழரையை என்னத்துக்கு விலைகொடுத்து வாங்கறீங்க ?


Saai Sundharamurthy AVK
ஜூலை 15, 2024 19:01

விளையாட்டாக செய்தது வினையில் முடிந்தது.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ