உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானாவில் பா.ஜ.,தப்பியது எப்படி?

ஹரியானாவில் பா.ஜ.,தப்பியது எப்படி?

புதுடில்லி : ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும், அதன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே நிலவிய பனிப்போர் முடிவுக்கு வந்தது தான், ஹரியானா தேர்தலின் முடிவை தலைகீழாக புரட்டிப் போட்டது என தெரிய வந்துள்ளது.கருத்துக் கணிப்புகள் ஒரே மாதிரியாக இருந்ததே இல்லை. அந்த அதிசயம் ஹரியானா தேர்தலில் முதல் முறையாக நடந்தது. எல்லா கணிப்புகளும் காங்கிரஸ் ஜெயிக்கும் என அடித்துக் கூறின. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pciwxr0a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், பா.ஜ., மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோடி தலைமையில் மூன்றாம் முறையாக மத்தியில் ஆட்சியை பிடித்தாலும், பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி தயவில் தான் ஆட்சி அமைந்தது. மாறாக, ஹரியானாவில் பெரும்பான்மை தொகுதிகளை பிடித்ததுடன், ஓட்டு சதவீதத்தையும் பா.ஜ., அதிகரித்து உள்ளது.

சாதனை

இது பெருமைக்குரிய சாதனை மட்டுமல்ல; யாரும் எதிர்பாராத திருப்பம். ஓட்டு இயந்திரம் மீது பழி போடும் அளவுக்கு காங்கிரஸ் மனம் உடைந்து போயிருப்பதே அதற்கு சான்று. இந்த சாதனை எப்படி சாத்தியமானது? அரசியல் விமர்சகர்கள் ஆளுக்கொரு காரணம் சொல்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்., களம் இறங்கியது தான் தேர்தல் முடிவை திசை திருப்பியது என்பது அவர்கள் பார்வையில் விடுபட்ட தகவல். ஓட்டு போட்ட மக்களிடமே கேட்டு தெரிந்து கொண்ட தகவல்களின் தொகுப்பு இது: ஹரியானாவில் 2019 லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 10 தொகுதிகளையும் பா.ஜ., கைப்பற்றியது. ஆனால், 2024 தேர்தலில் பாதி இடங்களே கிடைத்தன. அகில இந்திய அளவில் 400+ இடங்களை பிடிப்போம் என பேசி வந்த பா.ஜ., தலைவர்களுக்கு, குறைந்தபட்ச பெரும்பான்மையான 273 கூட தேறவில்லை என்பது அதிர்ச்சி அளித்தது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை விட்டு விலகிச் சென்றதன் விளைவு என்பதை புரிந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ்., தயவு தேவைப்படும் நிலையில் பா.ஜ., இல்லை என கட்சியின் தேசிய தலைவர் நட்டா, லோக்சபா தேர்தலுக்கு முன் சொன்னார். மோடி அரசின் பல நடவடிக்கைகளும், அவரது அணுகுமுறையும் தங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை என்பதை ஆர்.எஸ்.எஸ்., நாசூக்காக உணர்த்தியும், அரசின் போக்கில் மாற்றம் தெரியவில்லை. இதனால், ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ.,வுக்காக களப்பணி ஆற்றிய ஆர்.எஸ்.எஸ்., முதல் முறையாக இந்தாண்டு லோக்சபா தேர்தலில் ஒதுங்கி நின்றது. அதன் தாக்கம் என்ன என்பது வரலாறு. பத்தாண்டுகள் ஆட்சி செய்த ஹரியானாவும் கைவிட்டு போனால், அடுத்து வரும் மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், டில்லி, பீஹார் தேர்தல்களை சந்திப்பது பெரும் சவாலாகி விடும் என்பதை உணர்ந்து பா.ஜ., தலைமை சுதாரித்தது.

முதல்வர் மாற்றம்

ஆர்.எஸ்.எஸ்., மேலிடத்துடன் சமாதானம் பேசினர். நீரடித்து நீர் விலகாது என்ற ரீதியில் உடனடி சமரசம் ஏற்பட்டது. ஜூலை 29ல் ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் அருண் குமாரை, ஹரியானா மாநில பா.ஜ., தலைவர் மோகன்லால் பர்தோலி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்தனர். விவசாயிகள் போராட்டத்தை சரியாக கையாளாமலும், கட்சியினரை சந்திக்காமலும் மக்கள் செல்வாக்கை இழந்த முதல்வர் கட்டாரை மாற்ற முதல் முடிவு எடுக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த சைனியை முதல்வராக்க தீர்மானித்தனர். அவருடைய ஒரே வேலை கிராமங்களுக்கு சென்று கட்சியினரையும், விவசாயிகளையும் சந்தித்து மனக்காயத்துக்கு மருந்திடுவது என தெரிவிக்கப்பட்டது.மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் சுறுசுறுப்பான மாற்றுக் கட்சிகளின் தலைவர்களை பா.ஜ.,வுக்கு அழைத்து வரும் பணி மாநில பா.ஜ., தலைமைக்கு தரப்பட்டது. கட்டார் மீதும், கட்சியின் மீதும் அதிருப்தியில் இருக்கும் தொண்டர்களுக்கு பதிலாக, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களே களம் இறங்கி, கூப்பிய கரங்களுடன் வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து, பா.ஜ., எதிர்ப்பு எண்ணத்தை மாற்றுவது என திட்டமிடப்பட்டது.பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட அவர்கள் வெளிப்படையாக கேட்கவில்லை. உலகப்போர் மூளும் அளவுக்கு மோசமான சூழ்நிலை இருப்பதால், நாடும், நமது குடும்பமும், சந்ததியும் பாதுகாப்பாக வாழ ஒரு நல்ல அரசு அமைய வேண்டும்; அதை மனதில் கொண்டு ஓட்டு போடுங்கள் என உருக்கமாக கேட்டுள்ளனர்.

90 கூட்டங்கள்

மாவட்டத்துக்கு 150 பேர் என மாநிலம் முழுதும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் களம் இறங்கினர். ஒரே மாதத்தில் 16,000 கூட்டங்களை நடத்தினர். செப்டம்பர் 1 முதல் 9 வரை ஒவ்வொரு தொகுதியிலும் 90 கூட்டங்களை நடத்தினர். பழையவர்களுக்கு வாய்ப்பு தராமல், உள்ளூர் புதுமுகங்களை வேட்பாளராக்க பரிந்துரைத்தனர். அதிருப்தியில் இருந்த ஜாட் மற்றும் தலித் இன பிரமுகர்களை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளும், புது முதல்வரும் அடுத்தடுத்து சந்தித்து இணக்கத்துக்கு கொண்டு வந்தனர்.விளம்பர பரபரப்பு இல்லாமல், ஆர்.எஸ்.எஸ்., மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள், தேர்தலின் போக்கை திருப்பியது. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

ஆரூர் ரங்
அக் 10, 2024 20:43

காங் வட்டாரங்களில் அடிபடும் செய்தி. தேர்தலுக்கு முன் வந்த கணிப்புகளில் காங் வெற்றி உறுதி என வந்ததன் பின்னணியில் பிஜெபி மேலிட தூண்டுதல் உள்ளது. அந்த (போலி)கணிப்புகளை நம்பி காங் ஊழியர்கள் அலட்சியமாக இருந்துவிட்டனர் எனும் முடிவுக்கு வந்துள்ளனர். டூ லேட் பப்பு அண்டு கோ.


என்றும் இந்தியன்
அக் 10, 2024 18:49

பாகிஸ்தான் hackers ஜம்மு காஷ்மீரில் EVM மெஷினை hack செய்து ஜம்மு காஷ்மீர் நேஷனல் conference மற்றும் 6 சீட் காங்கிரசை ஜெயிக்கவைத்தது என்று ஏன் யாருமே உளறிக்கொட்ட மாட்டேன் என்கின்றார்கள்


என்றும் இந்தியன்
அக் 10, 2024 18:44

எல்லா கணிப்புகளும் காங்கிரஸ் ஜெயிக்கும் என அடித்துக் கூறின.???இதுக்குத்தானே பப்பு the கிரேட் நாங்கள் தேர்தல் கமிஷனை அணுகப்போகின்றோம் என்று உளறிக்கொண்டு திரிகின்றது


Sridhar Krishnan
அக் 10, 2024 12:43

ஜெய் ஸ்ரீராம் , திராணி இருந்தால் தமிழ்நாடு அரசிடம் கூறவும் பேரணியை தடை செய்ய .


Ramesh Trichy
அக் 10, 2024 10:29

தமிழ் நாட்டுக்கு RSS சை கண்டா வரச்ச்சொல்லுங்க


Sridhar Krishnan
அக் 10, 2024 12:44

Already in Tamilnadu


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 10, 2024 13:16

ஆர் எஸ் எஸ் எதற்கு ???? திமுக வே ஆட்சியைத் தொடராமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்து வருகிறது கச்சிதமாக .....


Mohan
அக் 10, 2024 10:21

என்னமோ,உளறல் மன்னன் கார்கேயினால் 34 சீட்டுகள் ஜெயித்ததாக கூறும் விடியல் சமபள ஆசாமி அவர்களே, காங்கிரஸ்,பாஜக இருவரும் ஜெயித்த இடங்களில் பெரும்பாலான இடங்களில் குறைவான வித்தியாசத்திலேயே ஜெயித்துள்ளனர். அதனால் மக்களின் ஆதரவு கிடைப்பதற்கு முயற்சிகள் செய்து வெற்றி அடைந்ததை குறைத்து மதிப்பிட வேண்டாம். லோக்சபா தேர்தலில் தோல்வி பெற்ற பாஜகவினர் மாத்தி யோசித்தனர், வெற்றி பெற்றனர் என்பதே உண்மை.


Sundaram Bhanumoorthy
அக் 10, 2024 10:15

BJP தலைவர் திரு.JP நட்டா RSS உதவி எங்களுக்கு தேவை இல்லை என திமிராக பேசியதால் பாராளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வியது.தவறை உணர்ந்து கொண்டதால் RSS களப்பணி ஆற்றியது.முதலில் தேசம்.பிறகு கட்சி,கடைசி தான் தனி மனிதர்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 10, 2024 09:39

தேர்தல் பிரச்சாரம் நடந்த பொழுதே இத்தகவல் வடக்கத்திய மீடியாவால் வெளியிடப்பட்டது .....


veeramani
அக் 10, 2024 09:15

இந்திய தேர்தலில் எலக்ட்ரோனிக் வாக்கு மசினிகள் பயன்படுத்தப்பட்டுஉள்ளன . உலகமே வியக்கும் வகையில் இதன் நம்பக தன்மை தெரிவிக்கப்பட்டது . ஆனால் ஒரு சில கீழ்த்தர அரசியல்வாதிகள் வாக்கு விழுகாவிட்டால் மெஷினை குறை பேசுகிறார்கள். ஆடத்தெரியாதவனுக்கு தெரு குற்றமாம் மக்களின் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும்


Guna Gkrv
அக் 10, 2024 08:47

உங்க கையில் எல்லாம் இருக்கு அதனால் எதுவேண்டுமானாலும் நடக்கும்


Anand
அக் 10, 2024 10:30

இப்படியே காலம் பூராவும் சொல்லி சொல்லி தலையை சொறிந்துக்கொள்ளவேண்டியதுதான்...


முக்கிய வீடியோ