உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகாராஷ்டிரா தேர்தலை பாதிக்குமா ஹரியானா முடிவுகள்! காங். மாஜி முதல்வர் ஓபன் டாக்

மகாராஷ்டிரா தேர்தலை பாதிக்குமா ஹரியானா முடிவுகள்! காங். மாஜி முதல்வர் ஓபன் டாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்; ஹரியானா தேர்தல் முடிவுகள், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலை எந்த விதத்திலும் பாதிக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் கூறி உள்ளார்.ஹரியானா தேர்தல் முடிவுகள், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் பல்வேறு விஷயங்களை பேசி உள்ளார். அவர் கூறி இருப்பதாவது; ஹரியானா தேர்தல் முடிவுகள் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கின்றன. தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் முடிவுகள் எப்படி மாறின என்பதை கண்டுபிடிப்பது முக்கியம்.மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். தேர்தலில் முதன்முறையாக இதுபோன்ற சூழ்நிலைகள் உருவாகி, முடிவுகள் தலைகீழாக மாறி உள்ளதை பார்க்கிறோம். தேர்தல் முடிவு வெளியான போது பல பா.ஜ., தலைவர்கள் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது என்று கூறினார்கள்.தேர்தல் தோல்வி கட்சிக்குள் வெளிப்படையாகவே அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஹரியானாவில் நடக்கும் அதே நிகழ்வு மகாராஷ்டிராவில் நடக்கும் என்று சொல்லமுடியாது. அது வேறு, இது வேறு. அங்குள்ள ஆட்சி, மக்களின் முடிவு என்ன என்பதை பார்க்க வேண்டும். எனவே, இருமாநில தேர்தலையும் ஒன்றாக நாம் பார்க்க முடியாது.இவ்வாறு அசோக் கெலாட் கூறினார். முன்னதாக, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது.நவம்பர் 26ம் தேதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
அக் 12, 2024 09:35

ஆமாம் நீங்கள் வெற்றி பெற்று இருந்தால்... அது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும்.... நீங்கள் தோல்வி அடைந்தால்.... அது வரும் தேர்தலில் எதிரொலிக்காது....அப்படி தானே ???


கண்ணன்
அக் 12, 2024 08:42

மஹாராஷ்ராவில் தேர்தலுக்கு என்ன பாதிப்புவரும? காங்கில் உள்ள படிப்பறிவற்ற கூட்டத்திற்கு என்ன இதுபற்றித தெரியும்? அவர்களுது கட்சிக்குத்தான் பாதிப்பு


Duruvesan
அக் 12, 2024 07:32

பாஸ் காங்கிரஸ் ஜெயிக்கும் அதுக்கு தேவை 1. மோடி எதிர்ப்பு கை விடு ௨.காக்கே ராவுள் நீக்கம். நீ ஒத்துனு இருந்தா காக்கே வந்து இருப்பாரா? 3. ஹிந்து ஆதரவு நிலை 4. உன்ன போல கிழடு எல்லாம் ஒதுங்கணும் 5. தமிழ் நாட்டில் தனி பயணம் 6. RSS போல ஒரு அமைப்பு வேணும், சுயநலம் இல்லாமல் தொண்டு ஆற்றனும்


நிக்கோல்தாம்சன்
அக் 12, 2024 06:11

இப்படியெல்லாம் சொல்லுவதை விட்டு ராகுல் ஜாங்கிரியை வெளிநாட்டிலேயே பெர்மனெண்ட் ஆக தங்க சொல்லுங்க காங் மாஜி முதல்வரே , நெபொடிச முட்டாள்களை தூக்கி எரிவதற்கு தயக்கம் ஏன் ?


தாமரை மலர்கிறது
அக் 12, 2024 00:21

ஹரியா தோல்வி மனப்பான்மை மஹாராஷ்டிராவிலும் தோல்வியை உண்டுபண்ணும். காங்கிரஸ் இனி வெற்றிபெற வாய்ப்பே இல்லை.


வாய்மையே வெல்லும்
அக் 12, 2024 00:04

திருட்டு முழி உருளைக்கிழங்கு சிப்ஸ் கதம் கதம் ..இப்போ பேமஸ் ஜாங்கிரி எங்கு சென்று மேடையில மைக்கு பிடிச்சாலும் மோடிக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் செய்து ஊளையிட்டாலும் நீ தலையால தண்ணி குடிச்சாலும் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்ட ஹாஹா ஹா ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை