ரயிலில் கடத்திய ரூ.97 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் சூரஜ் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர், நேற்று காலை சோதனை நடத்தினர். அப்போது, திருப்பதி- - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில், 'ஏசி' பெட்டியில் உள்ள பயணியர் இருவரை சந்தேகத்தில் சோதனை செய்தனர்.அவர்கள் அணிந்திருந்த ஆடையில், ரகசிய பாக்கெட் அமைத்து, அதில், 97 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், மஹாராஷ்டிரா மாநிலம், சாங்கிளி பகுதியை சேர்ந்த நந்தகுமார், 32, மகேஷ், 22, என்பதும், கோவையில் இருந்து, கேரள மாநிலம், பத்தனம்திட்டா, சங்கனாச்சேரிக்கு பணத்தை கடத்திச் செல்வதும் தெரியவந்தது.பணத்தை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்து, வருமான வரித்துறை விசாரணை பிரிவு கூடுதல் இயக்குனரிடம் ஒப்படைத்தனர்.