உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசுக்கு அன்னா மீண்டும் கெடு

மத்திய அரசுக்கு அன்னா மீண்டும் கெடு

புதுடில்லி: ஜன் லோக்பாலை ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே மீண்டும் கெடு விதித்துள்ளார். அவ்வாறு மசோதாவை நிறைவேற்ற தவறினால் எம்.பி.,க்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும் என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஹசாரே கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் பேசுகையில், தற்போது எம்.பி., வீடுகளின் முன்பு 25 முதல் 30 பேர் வரை மட்டுமே போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறினால் ஆயிரகணக்கான மக்கள் எம்.பி., வீடுகளின் முன்பு போராட்டம் நடத்த வேண்டும். லோக்பால் மசோதா தொடர்பாக அரசுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது சமூக ஆர்வலர்கள் அவமானப்படுத்தப்பட்டனர் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ