உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 16 மாத உச்சம் தொட்ட மொத்த விலை பணவீக்கம்: காரணம் என்ன?

16 மாத உச்சம் தொட்ட மொத்த விலை பணவீக்கம்: காரணம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஜூன் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம் 3.36 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள், குறிப்பாக, காய்கறிகளின் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதற்கு முன், கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 3.85 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. தற்போது 16 மாதங்கள் கழித்து, மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்தே தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.இது குறித்து மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளதாவது: கடந்த மே மாதத்தில் 2.61 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம், ஜூன் மாதத்தில் 3.36 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு, கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கனிம எண்ணெய்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வு ஆகியவையே, இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த மே மாதத்தில் 9.82 சதவீதமாக இருந்த உணவுப் பிரிவு பணவீக்கம், கடந்த மாதம் 10.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே வேளையில், காய்கறிகள் பிரிவு பணவீக்கம், மே மாதத்தின் 32.42 சதவீதத்திலிருந்து, ஜூனில் 38.76 சதவீதமாக அதிகரித்துள்ளது. வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் ஆகியவற்றில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தே காணப்பட்டது. எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவை தவிர மற்ற அனைத்து பிரிவுகளிலும் பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாதங்கள் பணவீக்கம் (சதவீதத்தில்)

2023ம் ஆண்டு ஜூன் - 4.18% , ஜூலை - 1.36%, ஆகஸ்ட் - 0.52% , செப்டம்பர் - 0.26%, அக்டோபர் - 0.52%, நவம்பர்- 0.39 %, டிசம்பர்- 0.73%.2024ம் ஆண்டு, ஜனவரி- 0.27%, பிப்ரவரி- 0.20%, மார்ச்- 0.53%, ஏப்ரல்- 1.26%, மே - 2.61%, ஜூன்- 3.36%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Srinivasan Krishnamoorthi
ஜூலை 16, 2024 14:22

தமிழ்நாடு டெல்லி கர்நாடக தெலுங்கானா போன்ற மாநிலங்கள் இலவசங்களால் மக்களை சோம்பேறியாகவும் குடிகாரர்களாகவும் மாற்றி விரைவில் பழைய வளம் மிகு எத்தியோப்பியாவின் இன்றைய நிலையை அடையும்.


GMM
ஜூலை 16, 2024 14:00

அதிக சதவீத மக்கள் மாமிச உணவு சாப்பிட்டு வருகின்றனர். இருந்தும் காய்கறிகள் விலை ஏற்றம்? இடை தரகர்கள் முக்கிய காரணம்? இதனை நீக்க முக்கிய 3 வேளாண் மசோதாகள் வந்தது. கற்பனை கருத்துகள் கூறி, நிறுத்தப்பட்டது. கூட்டுறவு மாநில அரசியல் கட்சிகள் விரும்புவது இல்லை. உற்பத்தியாளர், மக்கள் தொடர்பு கொள்ள மாநிலம் வழி வகுத்து கொடுப்பது இல்லை. எதிலும் அரசியல். கூட்டுறவு சங்கம், இடை தரகர்கள் இல்லாத விற்பனை மூலம் உணவு பொருட்கள், காய்கறிகள், பழங்கள் விலை குறையும். பண வீக்கம் குறையும். Ex. அமுல், நந்தினி, ஆவின்.


MADHAVAN
ஜூலை 17, 2024 17:21

இந்தமாதிரி ஒரு சில அறிவிலிகள் இப்படித்தான் ஜிஎஸ்டி வந்தால் விலைவாசி குறையும் என்று சொன்ன பலர் இப்போது வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்,


MADHAVAN
ஜூலை 16, 2024 13:33

வளர்ந்துவரும் மாநிலங்களுக்கு நிதி தராமல், உதிர்ப்பிரதேசத்துக்கு மொத்த காசையும் கொட்டி அந்த சோம்பேறிகலால் மாசம் 20 ஆயிரம் கோடி நட்டம் ஆனதுதான் மிச்சம், நிதியோக் நேற்று அறிவிப்பு வெளியிட்டுஇருக்கு,


ஆரூர் ரங்
ஜூலை 16, 2024 20:20

உ.பி கார மக்கள் இங்கு வந்து இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். உள்ளூர் 200 உ.பி ஸ் தான் உழைக்காமல் கள்ளக்குறிச்சி ஐட்டம் சாப்பிட்டு விட்டு மட்டையா கெடக்குது.


xyzabc
ஜூலை 16, 2024 12:34

இது ஒரு தாங்கி கொள்ள கூடிய inflation. உலகின் பல நாடுகளில் மோசமான நிலைமை.


MADHAVAN
ஜூலை 16, 2024 11:42

அம்பானிக்கு அதனிக்கு வரிப்பணத்தை வட்டி இல்லாமல், வாராக்கடனாக ஓசில கொடுத்தது,


Mohan
ஜூலை 16, 2024 15:11

அந்த அதானி இதை பற்றித்தான் விவாதித்திருப்பாரோ மருமகனிடம் என்னடா உங்க நியாயம்


MADHAVAN
ஜூலை 16, 2024 11:38

என்ன...


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 16, 2024 09:57

கணக்கு வழக்கில்லாத ஊழல் பணப்புழக்கமே பணவீக்கத்துக்குக் காரணம் .... அரசு ஊழியர்களுக்கு தாராளமாக அள்ளி வீசுவதால் மேலும் பணவீக்கம் அதிகரிக்கும் ....


Ramarajpd
ஜூலை 16, 2024 09:35

நூறு நாள் வேலையால் சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டி உள்ளது. கொடுக்கும் சம்பளம் அளவுக்கு வருமானம் வருவதில்லை. வருடத்திற்கு 3-4 மாதம் நல்ல விலை கிடைக்கும். அதனால் இப்போது பெரும்பாலான விவசாயிகள் தென்னை மரத்திற்கு மாறி விட்டனர் நான் உள்பட. 12 ஏக்கர் காய்கறிகள் விளைவித்த நான் இப்போது 3 ஏக்கராக குறைத்துக் கொண்டேன்.


S. Narayanan
ஜூலை 16, 2024 09:33

விடியல் பிறக்கும் என்று ஏமாந்து இப்போது போதைக்கு அடிமையாகி விட்டார்கள். இப்போது எப்போது எங்கு எலக்சன் வருகிறது


Mario
ஜூலை 16, 2024 09:28

கையாலாகாத அரசு.. நடவடிக்கை எடுக்கவில்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை